தமிழக அரசின் உத்தரவின்படி ஜெயங்கொண்டம் நகராட்சியில் 20க்கும் மேற்பட்ட கொடி கம்பங்கள் அகற்றம்

தமிழக அரசின் உத்தரவின்படி ஜெயங்கொண்டம் நகராட்சியில் 20க்கும் மேற்பட்ட கொடி கம்பங்கள் அகற்றம்
X
தமிழக அரசின் உத்தரவின்படி ஜெயங்கொண்டம் நகராட்சியில் 20க்கும் மேற்பட்ட கொடி கம்பங்கள் அகற்றப்பட்டது.
அரியலூர் ஏப்22- தமிழக அரசு கட்சிக்கொடி கம்பங்களை அகற்ற அண்மையில் உத்தரவிட்டிருந்தது. அந்த உத்தரவின் படி ஜெயங்கொண்டம் நகராட்சியில் பல்வேறு இடங்களில் இருந்த கொடிக்கம்பங்களை நகராட்சியினர் அகற்றினர். தமிழக அரசின் உத்தரவின் படி ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொடி கம்பங்களை அகற்ற நகராட்சியினர் ஏற்பாடுகளை செய்து இருந்தனர். அதன்படி செங்குந்தபுரம் ஜெயங்கொண்டம் அண்ணா சிலை, எம்ஜிஆர் சிலை, பெரியார் சிலை, காந்தி பூங்கா, அரசு பேருந்து பணிமனை வாயில் மற்றும் சின்ன வளையம் வேலாயுத நகர், கரடிகுளம் போன்ற இடங்களில் திமுக, அதிமுக, தேமுதிக, பாமக, தவெக, விடுதலை சிறுத்தை உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் பல இடங்களில் கொடிக்கம்பங்களை அமைத்திருந்தனர். இவற்றில் சில கட்சியினர் தாமாகவே முன்வந்து தங்களது கொடிக்கம்பங்களை அகற்றிக் கொண்டனர். மீதமுள்ள சுமார் 20க்கும் மேற்பட்ட கொடிக்கம்பங்களை நகராட்சி ஆணையர் உத்தரவின்படி பணியாளர்கள் சென்று அகற்றிக் கொண்டு சென்றனர். இது பொதுமக்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றது.
Next Story