முப்பத்திக்கோட்டகம் ஸ்ரீ கண் கொடுத்த மாரியம்மன் கோவில் 20-ம் ஆண்டு வைகாசி பெருவிழா

காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் தீக்குழியில் இறங்கி நேர்த்திக் கடன் செலுத்தினர்
நாகை மாவட்டம் திருக்குவளை அடுத்த முப்பத்திக்கோட்டத்தில், ஸ்ரீ கண் கொடுத்த மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலின் 20 -ம் ஆண்டு வைகாசி பெருவிழா கடந்த மே மாதம் 25-ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கி நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தீமிதி திருவிழா நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் குளக்கரையில் இருந்து ஊர்வலமாக வந்து, தீக்குழியில் இறங்கி நேர்த்திக் கடனை நிறைவேற்றினர். முன்னதாக, கண் கொடுத்த மாரியம்மன், கணபதி, பாலமுருகன், அய்யனார், பெரியநாயகி, வீரன், காத்தவராயன் உள்ளிட்ட தெய்வங்களுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. விழாவில், சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story