வீட்டில் இருந்த சுமார் 20 பவுன் நகை மாயம் - ஊரக காவல் நிலைய காவல் துறையினர் விசாரணை ....*

X
விருதுநகர் அருகே வீட்டில் இருந்த சுமார் 20 பவுன் நகை மாயம் - ஊரக காவல் நிலைய காவல் துறையினர் விசாரணை .... விருதுநகர் அருகே சத்திரெட்டியாபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கெளசிங் போர்டு காலனியைச் சேர்ந்த சுந்தர்ராஜ் (56) அரசு போக்குவரத்து பணிமனை கழகத்தில் அரசு தூய்மைப்பணியாளராக பணிபுந்து வருகிறார். இவரது மனைவி தங்க கொடி திருத்தங்கல்லில் தையல் பணி செய்து வருகிறார். மேலும் சுந்தர்ராஜ் - தங்க கொடி மகன் - மனோஜ் பிரபு அவரது மனைவி கிரகலட்சுமி ஆகியோருடன் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர் இந்த நிலையில் வழக்கம் போல் தங்க கொடி வேலைக்கு செல்லும் போது சேலையை மடித்து பீரோவில் வைத்துள்ளார் . அப்போது பீரோவினுள் உள்ள சிறிய லாக்கர் திறந்திருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் அதனுள் பார்த்த பொழுது அதிலிருந்த 60 பவுன் நகையை அதிலிருந்த சுமார் 20 பவுன் நகை மட்டும் மாயமானதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார் உடனடியாக இது குறித்து ஊர காவல் நிலைய காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார் இந்த தகவலின் அடிப்படையில் ஊரக காவல் நிலைய காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மோப்ப நாய் உதவியுடனும், கைரேகை நிபுணர்களிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் மேலும் இந்த காணாமல் போன நகை சம்பந்தமாக வீட்டில் உள்ளவர்களிடமும் விசாரணை செய்தும் மேலும் அவர்களிடம் வேறு நபர்கள் மீது சந்தேகம் ஏதும் உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Next Story

