நாய்க்கு விஷம் கொடுத்து 20 கோழிகளை திருடிச்சென்ற மர்ம கும்பல
Komarapalayam King 24x7 |15 Jun 2025 6:38 PM ISTகுமாரபாளையம் அருகே நாய்க்கு விஷம் கொடுத்து 20 கோழிகளை நான்கு பேர் கொண்ட கும்பல் திருடிச் சென்றது.
குமாரபாளையம் அருகே எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்தவர் சண்முகம். இவர் இந்த பகுதியில் நாட்டுக்கோழிகளை வளர்த்து வருகிறார். நேற்றுமுன்தினம் காலை 07:00 மணியளவில் கோழிப்பண்ணைக்கு வந்தார். அப்போது இவர் வளர்த்து வந்த நாய் இறந்து கிடந்தது. கோழிகளும் திருடப்பட்டது தெரியவந்தது. சி.சி.டி.வி. கேமராவை பார்த்த போது, இரவில் மர்ம நபர்கள் நால்வர் வந்து, நாய்க்கு விஷம் கொடுத்து கொன்றுள்ளனர். அதன் பின் பண்ணையில் இருந்த 20 நாட்டுக்கோழிகளை திருடிச் சென்றது தெரியவந்தது. இது குறித்து குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.
Next Story


