காதலனுக்காக 20 லட்சத்தை திருடிய காதலி

கல்லூரியில் படிக்கும் ஆண் நண்பருக்காக வீட்டிலிருந்து 20 லட்சத்தை திருடி கொடுத்த காதலி
கல்லூரியில் படிக்கும் ஆண் நண்பருக்காக வீட்டிலிருந்து 20 லட்சத்தை திருடி கொடுத்த காதலி கார் சீக்கிரமா வாங்கு ஜாலியா ஊற சுத்தலாம் காசு கட்டிட்டியா? சீக்கிரம் கட்டுடா என்று தொல்லை கொடுத்த மாணவி இன்ஸ்டாகிராம் snapchat மூலமாக பள்ளி மாணவர்கள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை தவறான வழியில் சென்று சீரழிவது தொடர்கதையாக இருக்கிறது. அந்த வகையில் பெற்றோர் ஒருவர் தனது மகளை நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்று கஷ்டப்பட்டு மளிகை கடை நடத்தி மகளை கல்லூரியில் சேர்த்து படிக்க வைத்துள்ளார். ஆனால் அந்த மாணவி தந்தையின் கஷ்டத்தை உணராமல் கல்லூரியில் காதலிக்க தொடங்கி இருக்கிறார். காதலித்தது மட்டுமல்லாமல் ஆண் நண்பருடன் மது அருந்தி அவ்வப்போது உல்லாசமாகவும் இருந்து உள்ளார்கள். மாணவி தனது காதலனுக்கு கேட்கும் போதெல்லாம் வீட்டிலிருந்து பணம் திருடி கொடுப்பது வாடிக்கையாக இருந்திருக்கிறது. கஞ்சா போதையில் மாணவன் காதலியை பைக்கில் கூட்டி செல்லும் நம் எத்தனை நாட்கள் பைக்கிலேயே சுற்றுவது கார் வாங்க வேண்டும் என்று சொன்னதின் பேரில் மாணவி வீட்டில் இருந்த 20 லட்சம் ரூபாய் பணத்தை காதலனுக்கு பெற்றோர்களுக்கு தெரியாமல் பணத்தை காதலனிடம் கொடுத்துள்ளார். வீட்டிலிருந்த பணம் எப்படி மாயமானது என்கின்ற அதிர்ச்சியில் மாணவியின் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பிறகு பெற்றோர்களுக்கு தனது மகள் மீது சந்தேகம் வந்துள்ளது. மகளின் தொலைபேசியை சோதனை செய்து பார்க்கும் பொழுது தெரிய வருகிறது காணாமல் போன 20 லட்சம் பணத்தை காதலனுக்காக கட்ட கார் வாங்க கொடுத்துள்ளார் என்று தொலைபேசி பார்த்த பிறகு தெரிய வந்திருக்கிறது. இந்த விஷயத்தை அறிந்த பெற்றோர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை முயற்சி செய்து உள்ளார்கள். மாணவியின் காதலன் இன்ஸ்டாகிராமில் காதலிக்கு ஆபாச பேச்சுகளை பேசியிருக்கிறார். அதாவது முதலில் நாம் கார் வாங்கலாம் கார் வாங்கிய பிறகு இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி போடலாம் ட்ரிப் போலாம் என்றெல்லாம் மாணவிக்கு காதலன் ஆசை வார்த்தை கூறுகிறான். அவ்வப்போது மது அருந்திவிட்டு மனைவியிடம் உல்லாசமாக இருந்திருப்பது உரையாடல்களை பார்த்த பிறகு தெரிய வருகிறது. இது போன்ற உரையாடல்கள் எல்லாம் பார்த்து பெற்றோர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார்கள். மாணவி காதலனுக்கு கார் வாங்க கொடுத்த பணத்தை காதலனின் அண்ணன் ஷோரூம்யில் சென்று காரை முன்பதிவு செய்து இருக்கிறான். இந்தப் பெண்ணை காதலன் மற்றும் ஏமாற்றுவதில்லாமல் காதலனின் குடும்பமே ஒன்று சேர்ந்து ஏமாற்றி இருப்பது உரையாடலில் தெரிய வருகிறது. மாணவியின் காதலனுக்கு பல்வேறு வகையான போதைப் பழக்கம் இருக்கிறது கஞ்சா உட்பட. இந்தப் பெண்ணை ஏமாற்றியது போல் பல பெண்களை ஏமாற்றுவது வாடிக்கையாக வைத்துள்ளார் மாணவியின் காதலன் அதேபோல் பல்வேறு பெண்களுக்கு ஆசைவார்தை கூறுவது ஆபாச பேச்சுக்கள் பேசுவது பணம் பெறுவது என்பது தொடர்கதையாக வைத்துள்ளான். மாணவியை ஏமாற்றும் பொழுது மாணவிக்கு 17 வயது ஆகி இருக்கிறது அப்போதிலிருந்து ஆசை வார்த்தை கூறுவது ஆபாச பேச்சுக்கள் பேசுவது என்பது இருக்கிறது இதனால் போக்சோ சட்டம் பாயுமா என்கின்ற ஒரு கேள்வியும் எழுந்திருக்கிறது..
Next Story