வாழப்பாடியில் 20-ந்தேதி நடக்கிறது: தி.மு.க. சார்பு அணி நிர்வாகிகள் கூட்டம்

வாழப்பாடியில் 20-ந்தேதி நடக்கிறது: தி.மு.க. சார்பு அணி நிர்வாகிகள் கூட்டம்
X
கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் அறிக்கை
சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க.வின் சார்பு அணி நிர்வாகிகள் கூட்டம் வருகிற 20-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு வாழப்பாடியில் உள்ள மு.க.ஸ்டாலின் அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெறுகிறது. இதில் உறுப்பினர்கள் சேர்க்கை குறித்தும், வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்தும் விவாதிக்கப்படுகிறது. எனவே கிழக்கு மாவட்டத்துக்குட்பட்ட கட்சியின் துணை அமைப்புகளான அனைத்து அணிகளின் மாவட்ட தலைவர்கள், துணை தலைவர்கள், அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story