சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்ட 20 பேர் கைது

X
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி பகுதியில் சேவல் சண்டை சூதாட்டம் நடைபெறுவதாக புறநகர் DSP.சிபி சாய் சௌந்தர்யன் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சின்னாளப்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் வசந்தகுமார் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சின்னாளபட்டியை அடுத்த பண்ணப்பட்டி கோவர்த்தனா மில் அருகே சிலர் கூடியிருந்தனர். அவர்களிடம் சென்ற போது, அவர்கள் பணம் வைத்து சேவல் சூதாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருப்பது தெரிய வந்தது. உடனடியாக போலீசார் சுற்றி வளைத்து சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்ட 20 பேரை கைது செய்து சூதாட்டத்திற்கு பயன்படுத்திய ரூ.20 ஆயிரம் பணம், 12 டூவீலர்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story

