பாபாநாசம் கும்பகோணம் பகுதியில் ஜூன்.20 இல் மக்களுடன் முதல்வர் முகாம்

பாபாநாசம் கும்பகோணம் பகுதியில் ஜூன்.20 இல் மக்களுடன் முதல்வர் முகாம்
X
முகாம்
தஞ்சாவூர் மாவட்டம்,  பாபநாசம் (ம) கும்பகோணம் சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட ஊராட்சிகளில்  20.06.2025 அன்று மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெற உள்ளது.  பாபநாசம் (ம) கும்பகோணம் வட்டாரங்களில் 20.06.2025 அன்று சருக்கை தென்சருக்கை சமுதாயக்கூடத்திலும், உம்பளபாடி காவேரி (மேட்டுத்தெரு) அரசலாறு தலைப்பு (நீர்வளத்துறை) வளாகத்திலும், கோவிந்தநாட்டுச்சேரி புத்தூர் ஊராட்சிமன்ற அலுவலக வளாகத்திலும்,  ரெகுநாதபுரம் ஸ்ரீசன் மஹாலிலும், திருவலஞ்சுழி வெண்ணிலா திருமண மண்டபத்திலும், திருநல்லூர் மகாலெட்சுமி திருமண மண்டபத்திலும், உத்தமதானி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும், திப்பிராஜபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும், உள்ளூர் அரசு மேல்நிலைப் பள்ளியிலும், வலையப்பேட்டை சமுதாயக்கூடத்திலும் இந்த முகாம்கள் நடைபெறவுள்ளன. இதில், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் மற்றும் அனைத்து தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளார்கள்.  இந்த முகாம்கள் காலை 10 முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறவுள்ளது. இந்த முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து பயன்பெறலாம்.           மேற்கண்ட முகாம் நடைபெறும் இடங்களில், இரண்டு நாட்களுக்கு முன்பாகவே பொதுமக்களிடம் மனுக்கள் பெற்று முகாம் நாளன்று அம்மனுக்களை இணையவழியில் பதிவு செய்து தீர்வு காணப்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது. நடைபெறவிருக்கும் முகாம்களில் பொதுமக்கள் கலந்துகொண்டு தங்கள்   கோரிக்கைகளை உரிய ஆவணங்களுடன் அளித்து பயன்பெறலாம்.  மக்களுடன் முதல்வர் முகாமில் பெறப்படும் அனைத்து மனுக்களும் சம்பந்தப்பட்ட துறைகளால் பரிசீலனை செய்யப்பட்டு தகுதியின் அடிப்படையில் உரிய சேவைகள் 30 நாட்களில் மக்களுக்கு வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.
Next Story