திருச்செங்காட்டங்குடியில் தோட்டக்கலைத் துறை மூலம் 20 விவசாயிகளுக்கு
நாகை மாவட்டம் திருமருகல் அடுத்த திருச்செங்காட்டங்குடியில், தோட்டக்கலைத் துறை மூலம் மானியத்தில் விவசாயிகளுக்கு தண்ணீர் குழாய்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. திருமருகல் வட்டார தோட்டக்கலை துறை மூலம், பிரதம மந்திரியின் நுண்ணீர் பாசன திட்டத்தின்கீழ் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்திலும், பெரும் விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும் ஏக்கர் ஒன்றுக்கு 18 கருப்பு நிற தண்ணீர் குழாய்கள் வழங்கப்படும் என தோட்டக்கலை உதவி இயக்குனர் (பொறுப்பு) முகமது சாதிக் அறிவித்து இருந்தார். அதன்பேரில், 20 விண்ணப்பங்கள் பெறப்பட்டு தகுதியான 20 விவசாயிகளுக்கு மானியத்தில் தண்ணீர் குழாய்களை உதவி தோட்டக்கலை அலுவலர் செல்லப்பாண்டியன் திருச்செங்காட்டங்குடியில் வழங்கினார். இந்த தண்ணீர் குழாய்கள் மூலம் குறைவான அளவில் தண்ணீர் பயன்பாடு, மகசூல் அதிகரிப்பு, களைகள் வளர்வது குறைக்கப்படும், மின்சாரம் குறைவான அளவில் பயன்படும் என உதவி தோட்டக்கலை அலுவலர் செல்லப்பாண்டியன் தெரிவித்தார். மேலும், தண்ணீர் குழாய்கள் தேவைப்படும் சிறு, குறு விவசாயிகள், மானியத்தில் பெற தோட்டக்கலை அலுவலகத்திற்கு வந்து சிறு, குறு விவசாய சான்று, அடங்கல், நிலத்தின் வரைபடம், ஆதார் நகல், தொலைபேசி எண் ஆகியவற்றை இணைத்து விண்ணப்பங்களை அளிக்க வேண்டும் என்றார்.
Next Story



