ஆன் லைன் கம்பெனி நடத்தி மூன்று கோடியே 20லட்சம் மோசடி

ஆன் லைன் கம்பெனி நடத்தி மூன்று கோடியே 20லட்சம் மோசடி
ஆன்லைன் டிரேடிங் கம்பெனி நடத்தி நூதன முறையில் மூன்று கோடியே 20 லட்சம் மோசடி செய்த வழக்கில் அண்ணன் தம்பி கைது 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் கார்கள் பறிமுதல் ஆன்லைன் டிரேடிங் நிறுவனத்தை நடத்தி மோசடியாக திருமுல்லைவாயல் பகுதியை சேர்ந்த தணிகைவேல் 43 என்பவர் வசம் 3 கூடிய 20 லட்சத்தி 10 ஆயிரத்து 582 ரூபாய் பணத்தை மோசடி செய்ததாக அளித்த புகாரின் பேரில் விருட்சம் வெல்த் மேனேஜ்மென்ட் என்ற பெயரில் ஆன்லைன் டிரேடிங் கம்பெனியை நடத்தி வந்த அம்பத்தூரை சேர்ந்த சிவசங்கர் 43 மற்றும் அவரது தம்பி ராஜீவ் காந்தி 39 ஆகிய இருவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர் இருவரையும் கடந்த 19ஆம் தேதி போலீஸ்காவில் எடுத்து விசாரித்து முதலீட்டாளர்களின் பணத்தை வாங்கி அதில் நான்கு சொகுசு கார்கள் இரண்டு இரு சக்கர வாகனங்கள் வீட்டுமனைகள் மற்றும் இரண்டு ஆப்பிள் போன்கள் ஆகியவற்றை வாங்கி முதலீட்டாளர்களை ஏமாற்றியது தெரியவந்தது 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மேற்படி பொருட்களையும் நிலம் தொடர்பான ஆவணங்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர் சிறப்பான முறையில் விசாரணை செய்த குற்ற பிரிவு காவல் ஆய்வாளர் மற்றும் அவரது தலைமையிலான போலீசாரை ஆவடி காவல் ஆணையர் சங்கர் வெகுவாக பாராட்டினார்
Next Story