போக்சோ வழக்கில் கைதாகிய குற்றவாளிக்கு 20 ஆண்டு ஆயுள் தண்டனை
நீலகிரி மாவட்டம் போக்சோ வழக்கில் கைதாகிய குற்றவாளிக்கு 20 ஆண்டு ஆயுள் தண்டனை வழங்கி அதிரடி தீர்ப்பு உதகை நீதிமன்றம்.........…........................ நீலகிரி மாவட்டம் கூடலூர் உட்கோட்டம் கூடலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த06.02.2020 பாரதி நகர் நியூ ஹோப் பகுதியை சேர்ந்த பதினாறு வயது சிறுமி தன்னுடன் பழகி வந்த உறவினரான ரவி வயது 25 தகப்பனார் பெயர் கோலன் நியூ ஹோப் பாரதி நகர் பகுதி சேர்ந்தவர் என்பவர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளித்தார் இதன் அடிப்படையில் கூடலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய குற்ற எண் 12/2020 ச/பி 5(1)5nr/w6of pocso act 2012&451,IPC என்று வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது இதில் குற்றவாளியை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டது. இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்து உதகை மகிளா நீதிமன்றத்தில் கூடலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சித்ரா குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தார் இந்த வழக்கில் அரசு வழக்குறிஞர் செந்தில் குமார் வாதித்தார் இந்த வழக்கில் நீதிமன்ற விசாரணை முடிந்து குற்றவாளிக்கு சுமார் 20 ஆண்டுகள் ஆயுள் தண்டனையும் ரூபாய் 15,000 அபராதம் விதித்து உதகை மகளிர் நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் தீர்ப்பளித்தார்
Next Story



