நாளொன்றுக்கு இரண்டரை மணி நேரம் பணியாற்றினால் 20 நாட்களில் உறுப்பினர் சேர்க்கையை முடிக்கலாம்.
கரூர் - நாளொன்றுக்கு இரண்டரை மணி நேரம் பணியாற்றினால் 20 நாட்களில் உறுப்பினர் சேர்க்கையை முடிக்கலாம் - செந்தில் பாலாஜி விளக்கம். தி.மு.க. சார்பில் 'ஓரணியில் தமிழ்நாடு' என்ற நோக்கத்தோடு கரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் உறுப்பினர் சேர்க்கை செயலி குறித்து வாக்குச்சாவடி டிஜிட்டல் முகவர்களுக்கான பயிற்சி கூட்டம் கரூரில் உள்ள தனியார் கூட்டரங்கில் மாவட்ட செயலாளர் செந்தில் பாலாஜி தலைமையில் இன்று நடைபெற்றது. ஆண்ட்ராய்டு செல்போன் மூலம் உறுப்பினர் சேர்க்கை நடத்துவது குறித்த பயிற்சிகள் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியின் நிறைவில் பேசிய செந்தில் பாலாஜி தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஜூலை 1ஆம் தேதி இதற்கான செயலியை அறிமுகப்படுத்திய பிறகு உறுப்பினர் சேர்க்கை துவங்க உள்ளது .45 நாட்களில் உறுப்பினர் சேர்க்கை தமிழகம் முழுவதும் முடிக்க உத்தரவிட்டுள்ளார். அதேசமயம் நாள் ஒன்றுக்கு இரண்டரை மணி நேரம் பணியாற்றினால் 20 நாட்களில் இத்திட்டத்தை முடிக்க இயலும் எனவே பூத் கமிட்டி நிர்வாகிகள் , ஐடி விங்க் நிர்வாகிகள் , மகளிர் அணியினர் , இளைஞர் அணியினர் இதற்கான பணிகளை விரைவில் துவக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
Next Story





