வேப்பனப்பள்ளி அருகே 20 டன் ரேஷன் அரிசி கடத்திய டிரைவர் கைது.

X
கிருஷ்ணகிரி குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் வேப்ப னப்பள்ளி-பேரிகை சாலை நாச்சிகுப்பம் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி போலீசார் சோதனையிட்டதில் லாரியில் 20 டன் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. விசாணையில் அவர் கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தை சேர்ந்த அரவிந்த் (32) என்பது வேப்பனபள்ளி அதன் சுற்று வட்டார பகுதிகளில் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசி வாங்கி அதிக விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. அதைஅடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
Next Story

