மேட்டுமருதூரில் தேவேந்திரகுல கல்வி குடும்பத்தின் சார்பில் 20 ஆம் ஆண்டு முப்பெரும் விழா

தேர்ச்சி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு பரிசளிப்பு
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மேட்டுமருதூரில் தேவேந்திரகுல வேளாளர் கல்வி குடும்பத்தின் சார்பில் இருபதாம் ஆண்டாக பத்தாம் வகுப்பு பன்னிரண்டாம் வகுப்பு மற்றும் பட்டப் படிப்பு தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளை பாராட்டி பரிசு வழங்கும் விழாவிற்கு குளித்தலை துணை வட்டாட்சியர் ஜெயவேல் காந்தன் தலைமையில் நேற்று இரவு நடைபெற்றது. வழக்கறிஞர்கள் வாசுதேவன், பாலகுமார், ரதி, ஆசிரியர் ரவிச்சந்திரன் கல்வி குடும்பத்தின் பொறுப்பாளர்கள் குமார். புவனேஸ்வரன், அண்ணாதுரை, புது ராஜா, ரங்கநாதன், வினோத்குமார் உதயகுமார், மூர்த்தி, சக்திவேல் ஆகியர்கள் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக குளித்தலை காவல் உதவி ஆய்வாளர் ராஜேந்திரன் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சால்வை அணிவித்து நோட் ,பேனா பேக், பொதுஅறிவு புத்தகம், சீல்டு மற்றும் நினைவு பரிசுகள் வழங்கி பாராட்டி பேசினார். இந்நிகழ்வில் கடந்த ஆண்டு தமிழ்நாடு காவல்துறையில் தேர்வாகி பணியில் இருந்து வரும் மருதூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி குழந்தைவேல் மகள் திரிஷா அவர்களின் பெற்றோர்களை பாராட்டி நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் கிராம முக்கியஸ்தர்ள் பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story