காலாவதியான நீதிமன்ற ஆணையை வைத்து கோழி பண்ணை உரிமையாளர் நிலத்தில் அத்துமீறி நுழைந்த 20 கும் மேற்பட்ட நபர்கள் கொலை மிரட்டல் விடுத்ததாக புகார்

புகார்
தேனி மாவட்டம் தேனி அருகே வீரபாண்டி பகுதியை சேர்ந்தவர் கர்ணன் இவர் வீரபாண்டியில் தனக்கு சொந்தமான தோட்டத்தில் கோழிப்பண்ணை வைத்து தொழில் செய்து வருகிறார் இந்த நிலையில் கர்ணனுக்கும் அவர் அருகில் உள்ள தோட்டத்தின் உரிமையாளரான ரஞ்சித் குமாருக்கும் நிலம் சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது இந்த நிலையில் நிலம் சம்பந்தமாக இருவரும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் நீதிமன்றத்தின் உத்தரவுபடி 6 வார காலத்திற்குள் நிலத்தை அளவீடு செய்ய வேண்டும் என தேனி நில அளவையருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது இந்த நிலையில் 2 மாதம் கடந்த நிலையில் இன்று காலை நில அளவையர் கர்ணனின் நிலத்தை அளவீடு செய்ய வந்ததாகவும் அப்போது அவரை கர்ணன் தடுத்து நிறுத்தி நீதிமன்றம் ஆணை காலாவதி ஆகிவிட்டதால் தனது நிலத்தை அளவீடு செய்ய அனுமதிக்கவில்லை என கூறப்படுகிறது இதனால் ஆத்திரம் அடைந்த ரஞ்சித் குமார் கர்ணனின் நிலத்தை அபகரிக்கும் நோக்கத்தில் 20க்கும் மேற்பட்ட நபர்களுடன் வந்து கல்லை பதிக்கும் முயற்சியில் ஈடுபட்டு தனக்குக் தனது மனைவிக்கும் கொலை மிரட்டல் விடுத்து இடத்தை தன்னிடம் விற்று விட்டு சென்றுவிடு என மிரட்டியுள்ளார் என தெரிவித்தார் கர்ணன் இதனால் தனது தொழில் பாதிக்கப்பட்டு கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி தனது உடல் நிலையும் பாதிக்கப்பட்டதாகவும் தனக்கு கொலை மிரட்டல் விடுத்த ரஞ்சித் குமார் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் அத்துமீறி தனது தோட்டத்திற்குள் நுழைந்து தனக்கு கொலை மிரட்டல் விடுத்த ரஞ்சித் குமார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கர்ணன் கோரிக்கை வைத்துள்ளார் பேட்டி - கர்ணன் (கோழிப்பண்ணை உரிமையாளர்)
Next Story