ஏரிகாத்த ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் புதிய கொடி மரம்

X
மதுராந்தகம் ஏரிகாத்த ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு அமைச்சர் கே.என்.நேரு ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் புதிய கொடி மரம் வழங்கினார். செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் உள்ள பழமையான ஸ்ரீ ஏரிகாத்த ராமர் (அ) ஸ்ரீ கோதண்டராமர் திருக்கோவிலில் வரும் 21-ஆம் தேதி கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற உள்ளது. இதனையொட்டி, பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தனது சொந்த செலவில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் புதிய கொடி மரத்தை அமைத்துக் கொடுத்துள்ளார். சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழமையான இந்த கோவிலில், ஜீர்ணோதாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழாவுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்த விழாவையொட்டி, அமைச்சர் கே.என்.நேரு அவர்கள் கோவில் நிர்வாகத்திடம் புதிய கொடி மரத்தை வழங்கினார். கும்பாபிஷேக விழாவானது வேதபாராயணம், ஹோம யாகங்கள், திருமஞ்சனம், சிறப்பு அலங்காரங்கள், அன்னதானம், பல்லக்கு ஊர்வலம் என பல்வேறு பக்திப் பண்பாட்டு நிகழ்ச்சிகளுடன் வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. இந்தக் கொடி மரம் வழங்கும் நிகழ்ச்சியில் கோவில் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள், பக்தர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
Next Story

