தோட்ட தொழிலாளர்கள் 20-ம் நாள் சத்தியாகிரகம்

X
குமரி மாவட்டம் சுருளகோடு பகுதியில் தனியார் லேட்டக்ஸ் தொழிற்கூட நிறுவனத்தில் கடந்த 2 ஆண்டுகளாக ஊதிய உயர்வு நீதிபூர்வமாக வழங்கவில்லை, மற்றும் பல குற்றசாட்டுகளை முன்வைத்து கடந்த மாதம் 15-ம் தேதி முதல் தொடர் போராட்டம் நடந்து வருகிறது. நேற்று முதல் தொடர்ந்து சத்தியாக்கிரகம் நடைபெறுகிறது. இன்று மேழ்ஸி தலைமையில் போராட்டம் துவங்கியது. அரசு ரப்பர் கழக மணலோடை தோட்ட சிஐடியு தொழிலாளர்கள் சார்பில் சங்க துணை தலைவர் ஏ.வேலப்பன், உதவி செயலாளர் ஜஸ்டின், லாரன்ஸ், ஸ்டீபன் உட்பட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். ஆகஸ்ட் 15 அன்று தொழிலாளர்கள் தங்களது வாழ்க்கை விடியலுக்காய் குடும்பத்தோடு உண்ணாவிரதம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
Next Story

