கேர்மாளத்தில் 20 நாட்களாக தெருவிளக்குகள் எரியாததை கண்டு கொள்ளாத ஊராட்சி நிர்வாகம்.

X
கேர்மாளத்தில் 20 நாட்களாக தெருவிளக்குகள் எரியாததை கண்டு கொள்ளாத ஊராட்சி நிர்வாகம். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி வட்டம் கேர்மாளம் மலை கிராமத்தில் கடந்த 20 தினங்களாக தெரு விளக்குகள் எரியாததால் பொதுமக்கள் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் அமைந்துள்ள கேர்மாளம் மலை கிராமத்தில் தெரு விளக்குகள் நீண்ட நாட்களாக எரியவில்லை என ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் ஆதங்கம். இரவு நேரங்களில் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் வனவிலங்குகள் கிராமத்திற்குள் நுழைந்து தாக்கும் அபாய நிலை உள்ளது. தெருவிளக்கு உட்பட சாக்கடை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை பிரச்னைகள் குறித்து பலமுறை புகார் அளித்தும் கண்டு கொள்ளாத கேர்மாளம் ஊராட்சி மீது மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story

