ஊத்தங்கரை அருகே ஓடடிரைவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை.

X
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த கல்லாவியை சேர்ந்த டிரைவர் லட்சுமணன்(27) இவரது அண்ணன் மனைவியின் தங்கையான 17 வயது சிறுமியுடன் லட்சுமணன் பழகியதில் சிறுமி கர்ப்பம் அடைந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் கல்லாவி போலீசார் லட்சுமணனை கைது செய்தனர். இது தொடர்பாக கிருஷ்ணகிரி மகளிர் விரைவு நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்த நிலையில் நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. நீதிபதி குற்றஞ்சாட்டப்பட்ட லட்சுமணனுக்கு, 20 ஆண்டு சிறை , ரூ.1,000 அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
Next Story

