பொள்ளாச்சி மயானத்தில் 20-க்கும் மேற்பட்ட சவக்குழிகள் – பரபரப்பு !

பொள்ளாச்சி–உடுமலை சாலையில் உள்ள மின் மயானத்தில், இறப்புகள் நிகழாத நிலையில் 20-க்கும் மேற்பட்ட சவக்குழிகள் முன்கூட்டியே தோண்டப்பட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
பொள்ளாச்சி–உடுமலை சாலையில் உள்ள மின் மயானத்தில், இறப்புகள் நிகழாத நிலையில் 20-க்கும் மேற்பட்ட சவக்குழிகள் முன்கூட்டியே தோண்டப்பட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. பொதுவாக இறப்பு நிகழ்ந்த பிறகு மட்டுமே உறவினர்கள் பணம் வழங்கி குழி தோண்டப்படும் நிலையில், இவ்வாறு ஒரே நேரத்தில் பல குழிகள் தோண்டப்பட்டிருப்பது உள்ளூர்வாசிகளை அதிர்ச்சி அடையச் செய்தது. மயானத்தை பராமரித்து வரும் பாபு என்பவர் ஆட்கள் இல்லாத காரணத்தால் ஜே.சி.பி. மூலம் குழிகள் தோண்டியதாக தகவல். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பினர். நகராட்சி ஆணையாளர் குமரன், குழிகள் தற்போது மூடப்பட்டுவிட்டதாகவும், பாபுவிடம் விசாரணை நடத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.
Next Story