சிறுமியை கர்ப்பமாக்கியவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை

சிறுமியை கர்ப்பமாக்கியவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை
X
குற்றச் செய்திகள்
சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் கார்த்திக் (26). தனியார் பஸ் டிரைவர். இவருக்கும், பஸ்சில் பயணம் செய்த பொன்னமராவதி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டது. காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி கடந்த 2020ம் ஆண்டு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய் தார். இதில் சிறுமி கர்ப்பமானார். இதுபற்றி சிறுமி யின் தந்தை அளித்த புகாரின்பேரில் திருமயம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிந்து போக்சோ சட்டத்தில் கார்த்திக்கை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை புதுக்கோட்டை மக ளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை நீதிபதி விசாரித்து, குற்றம்சாட்டப்பட்ட கார்த்திக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.14 ஆயிரம். அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் பாதிக் கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசின் சார்பில் ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டார்.
Next Story