தூய்மை பணியாளர்கள் சென்ற வேன் மீது கனரக லாரி மோதி விபத்தில் 20 பேர் காயம்

X
தூய்மை பணியாளர்கள் சென்ற வேன் மீது கனரக லாரி மோதி விபத்தில் 20 பேர் காயம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனை அனுமதி செங்கல்பட்டு மாவட்டம்,மதுராந்தகம் அருகே பழமத்தூர் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சலையில் தாம்பரம் மாநகராட்சி பகுதியில் ஒப்பந்த தூய்மை பணியாளராக பணிபுரியும் சித்தாமூர் அருகே உள்ள அமர்ந்தகரனை பகுதி சேர்ந்த பெண்கள் தூய்மை பணி முடித்துவிட்டு மீண்டும் தங்கள் ஊருக்கு வேனில் திருப்பிக் கொண்டிருந்துள்ளனர். அங்கு மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக லாரி ஒன்று மண் கொட்டி விட்டு திரும்பி உள்ளது அப்போது தூய்மை பணியாளர்களை ஏற்றி வந்த வேன் நிறுத்தி உள்ளார்.பின்னால் சிமெண்ட் மூட்டை ஏற்றி வந்த கனரக லாரி வேன் மீது மோதியுள்ளது மோதிய விபத்தில் இதில் பயணம் செய்த 20 பேர் காயம் அடைந்தனர்.பெண் ஒருவர் வேனின் முன்பக்க கண்ணாடி உடைத்துக் கொண்டு வெளியே விழுந்து உள்ளார். காயம் அடைந்தவர்களை செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து படாளம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story

