திருச்செங்கோடு பேருந்து நிலையத்தில் முகவரி தெரியாமல் நின்ற முதியவர் மீட்கப்பட்டு 20 நாட்களுக்குப் பின் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு

கடந்தஅக்டோபர் மாதம் 30 ஆம் தேதி  திருச்செங்கோடு பேருந்து நிலையத்தில் தான் யார் என சொல்லத் தெரியாத நிலையில் தடுமாறியபடி இருந்தசுமார் 70 வயது முதியவர் மீட்கப்பட்டு பராமரிக்கும் கரங்கள் இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்த நிலையில்20 நாட்களுக்கு பின் அவரது மனைவியிடம் ஒப்படைப்பு
திருச்செங்கோடு பேருந்து நிலையத்தில் கடந்த அக்டோபர் 30ஆம் தேதிசுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர்தான் யார் என அடையாளம் கூற முடியாத நிலையில் தடுமாறியபடி இருப்பதாக பராமரிக்கும் கரங்கள் இல்லத்திற்கு தகவல் கிடைத்த நிலையில் அவரை மீட்டு இல்லத்தில் வைத்து பராமரித்து வந்தனர் மேலும் அவருடைய புகைப்படத்தை முகநூல் சமூக வலைதளங்கள் ஆகியவற்றில் பரப்பி இவர் யார் என அடையாளம் தெரிந்தால் இங்கு இருக்கிறார் வந்து மீட்டுக் கொள்ளலாம் என தெரிவித்திருந்தனர் இதன் அடிப்படையில் இந்த தகவல் கிடைக்கப்பெற்ற அரச்சலூர் அருகில் உள்ள குமாரபாளையம் பகுதியைச் சேர்ந்த முதியவரது மனைவி பாத்திமா மற்றும் அவரது மருமகள்கள் பராமரிக்கும் கரங்கள் இல்லத்திற்கு வந்து முதியவரது பெயர் அகமது செரிப் எனவும் அவர் சுயநினைவு இல்லாமல் பேருந்தில் ஏறி திருச்செங்கோடு பேருந்து நிலையம் வந்துவிட்டதாகவும் தாங்கள் தேடிக் கொண்டிருந்த நிலையில் சமூக வலைதளங்களில் இவரது புகைப்படத்தை பார்த்து வந்து மீட்டுச் செல்ல வந்திருப்பதாகவும்உரிய ஆதாரங்களை காட்டி முதியவர் அகமது பாஷாவை தங்களது இல்லத்திற்கு அழைத்துச் சென்றனர் பேருந்து நிலையத்தில் நினைவு தப்பிய நிலையில் அவர் இருந்த போது அவரிடம் இருந்த 2000 ரொக்க பணமும் மனைவியிடம் ஒப்படைக்கப்பட்டது அவரை இனிமேலாவது பாதுகாப்பாக வைத்துக் கொள்ளும்படி பராமரிக்கும் கரங்கள் நிறுவனத்தை நடத்தி வரும் பீட்டர் செல்வராஜ் பாத்திமா மற்றும் அவர்களது குடும்பத்தினரிடம்  அறிவுறுத்தினார்.முதியவரை காணாமல் தவித்து வந்த நிலையில் மீட்டு பராமரித்து எங்கள் வசம் ஒப்படைக்க உதவி செய்த பராமரிக்கும் கரங்கள் இல்ல நிறுவனர் பீட்டர் செல்வராஜிக்கும் சமூக ஆர்வலர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக அகமது செரிப்பீன்  மனைவி தெரிவித்தார்.
Next Story