நாமக்கல் ஜே.காம்.2.0 கூட்டத்தில் இளம் தொழில் முனைவோருக்கு சத்தியமூர்த்தி அன் கோ சேர்மன் சத்தியமூர்த்தி வழங்கிய பிஸினஸ் டிப்ஸ்

நாமக்கல் ஜே.காம்.2.0 கூட்டத்தில் இளம் தொழில் முனைவோருக்கு சத்தியமூர்த்தி அன் கோ சேர்மன் சத்தியமூர்த்தி வழங்கிய பிஸினஸ் டிப்ஸ்
X
வளரும் இளம் தொழில் முன்னோர்கள் நாம் சார்ந்து இருக்கும் தொழில்களில் இலக்குகளை நிர்ணயித்து செயல்பட வேண்டும்,! - நாமக்கல் சத்தியமூர்த்தி அன் கோ சேர்மன் சத்தியமூர்த்தி
ஜே.சி.ஐ அமைப்பின் துணை அமைப்பான ஜே.காம். ,வர்த்தக இணைப்புக்கான ஒரு அங்கமாக திகழ்கிறது. நாமக்கல் ஜே.காம் 2.0 அமைப்பின் மாதந்திர சந்திப்பு கூட்டம் டேபிள் டீரீ ரெஸ்டாரன்டில் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக நாமக்கல் சத்தியமூர்த்தி அன் கோ சேர்மன் சத்தியமூர்த்தி கலந்து கொண்டு பேசினார். நாமக்கல் ஜே.காம் சேர்மன் பூபதிராஜா தலைமை தாங்கினார்.துணை சேர்மன் விக்னேஷ் குமார், செயலாளர் மோகன்ராஜ், பொருளாளர் சேகர், பயிற்சியாளர் "மரம்" சிங்காரவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் புதிய தொழில் முனைவோர் சார்பில் இருபதுக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
தொழில் முனைவோர் அனைவரும் தங்கள் தொழில் பற்றிய விவரங்களை கூட்டத்தில் தெரிவித்தனர்.
மேலும் தங்களின் தேவைகளையும் வலியுறுத்தினார்கள். இவர்களில் பெரும்பாலோருக்கு இந்த கூட்டத்திலேயே வர்த்தக தொடர்பு கிடைத்தது.சிறப்பு விருந்தினர் தொழிலதிபர் சத்தியமூர்த்தி பேசுகையில்.. நாம் சார்ந்து இருக்கும் தொழில்களில் இலக்குகளை நிர்ணயித்து செயல்பட வேண்டும்,பிஸினஸ் என்பது லாபத்திற்காக மட்டுமே இருக்க வேண்டும்,அமெரிக்காவில் தொழிலதிபர்களுக்கு தான் முதல் மரியாதை தருகிறார்கள்,நிதிமேலாண்மை எவ்வளவு முக்கியமோ அதைப்போல விற்பனை திறமையும் முக்கியமானதாகும்.ஒவ்வொரு தொழில் முனைவோரும் இதை மனதில் கொண்டு செயலாற்றினால் சாதிக்கலாம் என்று பிஸினஸ் டிப்ஸ் வழங்கினார்.ஜே.காம்.சேர்மன் பூபதிராஜா பேசுகையில் “ஜே.காமின் முக்கிய நோக்கம் 100 சதவீத வர்த்தகம் 100 சதவீத வளர்ச்சி என்பது தான். அடுத்த கூட்டத்தில் தொழில் முனைவோர் தங்கள் தயாரிப்புகளை கொண்டு வந்து பார்வைக்கு வைக்க வேண்டும் என்றார்.
Next Story