உடுமலை அருகே 20 ரூபாய்க்கு 2 லட்சம் காப்பீட்டுத் தொகை வழங்கல்
Udumalaipettai King 24x7 |19 Sep 2024 4:10 PM GMT
பொது மக்களிடம் விழிப்புணர்வு
திருப்பூர் மாவட்டம் - உடுமலை அருகே உடுக்கம்பாளையம் கிராமத்தில் சலூன் கடை வைத்து நடத்திவந்த தேவான் (எ)லேட். தியாகராசன் சில மாதங்களுக்கு முன் சாலை விபத்தில் காலமானர். தியாகராசன் தேவனூர்புதூர் தமிழ்நாடு கிராம வங்கி கிளையில் கணக்கு வைத்திருந்தார். வங்கி கணக்குத் துவங்கியபோது - அந்த வங்கியின் கிளை மேலாளர் ஜெயக்குமார் அறிவுறுத்தல் மற்றும் வருடம் ஒன்றிற்கு இருபது ரூபாய் (ரூ.20/=) மட்டும் காப்பீட்டு தொகை செலுத்தும் வகையில் காப்பீடு செய்திருந்தார். அவர் ஒரு முறை மட்டுமே 20 - ரூபாய் காப்பீட்டுத்தொகை செலுத்திய நிலையில் சாலை விபத்தில் காலமானார். அவர் ஒரு முறை செலுத்திய காப்பீட்டு தொகை_20 -ரூபாய்க்கு - இரண்டு லட்சம் ரூபாய் மதிப்பிலான காப்பீட்டுத் தொகைக்கான காசோலையை -இன்று லேட் தியாகராசனின் மனைவியிடம் கிளை மேலாளர் திரு.ஜெயக்குமார் அவர்களால் வழங்கப்பட்டது. அத்தொகை தியாகராசனின் மனைவி வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு அதற்கான வங்கி கணக்குப் புத்தகமும் அவரிடம் வழங்கப்பட்டது. வங்கியில் காப்பீடு செய்வதற்கான அவசியம் பற்றியும் அதனால் பொதுமக்களுக்கு கிடைக்கும் நன்மை பற்றியும் - பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கிளை மேலாளர் விளக்கிப் பேசினார். இதற்கான நிகழ்வு உடுக்கம்பாளையம் பொது சாவடியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் முன்னால் ஊராட்சி மன்ற தலைவர் சு.பரமசிவம் , முன்னால் VAO ரா.ராஜவேல், கிளை அஞ்சலக அலுவலர் கார்த்தி பிரபா, வங்கி அலுவலர் அருள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். எளிய குடும்பத்திற்கு காலத்தில் உதவிய தேவனூர்புதூர் தமிழ்நாடு வங்கி கிளைமேலாளருக்கு பொதுமக்கள் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது.
Next Story