கரூர்-20 பவுன் நகை கொள்ளை- 24 மணி நேரத்தில் பிடித்த காவலருக்கு பாராட்டு.
கரூர்-20 பவுன் நகை கொள்ளை- 24 மணி நேரத்தில் பிடித்த காவலருக்கு பாராட்டு. கரூர் மாவட்டம், மகாதானபுரம் அக்ரஹாரத்தில் உள்ள ராம்குமார் என்பவர் வீட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த வலிக்கலாம்பாடு ஊரைச் சேர்ந்த பிரதீப் 46 அவரது மனைவி பரிமளா தேவி உடன் கடந்த 07 மாதங்களாக தங்கி மகாதானபுரம் அக்ரஹாரத்தில் உள்ள சமஸ்கிருத பாரதி பாஷியம் பயிற்சி மையத்தில் நிர்வாக பணி செய்து கொண்டும் ஆசிரியராகவும் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் 22.07.25 ல் காலை தான் குடியிருக்கும் வீட்டில் சுவாமி கும்பிட்டுவிட்டு பீரோவை திறந்து பார்த்தபோது பீரோவில் இருந்த சுமார் 20 பவுன் தங்க நகைகள் காணவில்லை என்று காவல் நிலையத்தில் அளித்த புகாரைப்பெற்று வழக்கு பதிவு செய்தனர். காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்து பின்பு அங்கு சித்தாள் வேலை செய்த மகாதானபுரத்தை சேர்ந்த ரவிக்குமார் 45 என்பவரை சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர் மேற்கண்ட வீட்டில் வேலை செய்தபோது 20 பவுன் நகைகளை திருடியதாக ஒப்புக்கொண்டார். நேற்று அவரை கைது செய்து, அவரிடமிருந்து திருடுபோன நகைகளை கைப்பற்றி குளித்தலை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த திருட்டு சம்பவம் நடைபெற்ற 24 மணி நேரத்திற்குள் குற்றவாளியை கண்டுபிடித்து கைது செய்து, நகைகளை மீட்ட காவலர்களை கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜோஷ் தங்கையா பாராட்டி வெகுமதி வழங்கினார்.
Next Story





