ஒரு கோடி சிவலிங்கம் கோயிலில் 20 டன் எடையில் 26 அடி உயரம் கொண்ட பஞ்சபூத லிங்கம் பிரதிஷ்டை

ஒரு கோடி சிவலிங்கம் கோயிலில் 20 டன் எடையில் 26 அடி உயரம் கொண்ட பஞ்சபூத லிங்கம் பிரதிஷ்டை
ஒரு கோடி சிவலிங்கம் கோயிலில் 20 டன் எடையில் 26 அடி உயரம் கொண்ட பஞ்சபூத லிங்கம் பிரதிஷ்டை சத்தியமங்கலம் அருகே உள்ள தனவாசியில் ஒரு கோடி சிவலிங்கம் ஆலயம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இக் கோயில் வளாகத்தில் 20 டன் எடையுள்ள கல்லில் 26 அடி உயரத்தில் பஞ்ச பூத லிங்கம் சிலை சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. ஆலயத்திற்கு சோமனூர் பகுதியை சேர்ந்த கோபிநாத் சரண் வழங்கினார். இதில் சிவனடியார்கள் மற்றும் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னதாக, பஞ்ச பூத லிங்கத்தின் பீடம் மற்றும் பஞ்ச பூக லிங்கம் நிலைநிறுத்தும் பணியானது கிரேன் மூலம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, பிரதிஷ்டை செய்யப்பட்ட பஞ்ச பூத லிங்கத்திற்கு அபிஷேக பூஜைகள் செய்யப்பட்டு, பூ மாலை அணிவித்து சென்டைமேள வாத்தியங்கள் முழங்க சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பிரதிஷ்டை நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி பரவசத்துடன் வழிபட்டனர். இங்கு ஏற்கனவே, சிவன் அடியார்கள் தானம் கொடுத்த ஏராளமான சிவலிங்கங்கள் வைக்கப்பட்டுள்ளன.
Next Story