கடத்தி வரப்பட்ட 20 லட்சம் மதிப்பிலான 573 கிலோ கொண்ட 18 செம்மரக்கட்டைகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்ட

X
திருப்பத்தூர் மாவட்டம் கடத்தி வரப்பட்ட 20 லட்சம் மதிப்பிலான 573 கிலோ கொண்ட 18 செம்மரக்கட்டைகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்ட ஆம்பூர் அருகே மலைகிராமத்தில் வெளிமாநிலத்திலிருந்து கடத்தி வரப்பட்ட 20 லட்சம் மதிப்பிலான 573 கிலோ கொண்ட 18 செம்மரக்கட்டைகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் 2 பேர் கைது அவர்களிடம் இருந்து இருசக்கர வாகனம் பறிமுதல் ஆம்பூர் வனத்துறையினர் நடவடிக்கை திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மலைகிராமமான நாயக்கனேரி காப்புக்காட்டில், கடந்த ஜூன் மாதம் 27 ஆம் தேதி வெளிமாநிலங்களிலிருந்து செம்மரக்கட்டைகள் கடத்தி வருவதாக ஆம்பூர் வனத்துறை அலுவலர் பாபுவிற்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் வன அலுவலர் பாபு மற்றும் வனவர் செந்தில் தலைமையிலான வனத்துறையினர் காப்புக்காட்டில் தீவிர சோதனையில் ஈடுப்பட்டிருந்த போது, நாயக்கனேரி காப்புக்காட்டு எல்லையான நடுவூர் மற்றும் புதூர் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக வந்த வெளிமாநில பதிவெண் கொண்ட 3 கார்களை நிறுத்த முயன்ற போது, 2 கார்களை மட்டும் நிறுத்திவிட்டு மற்றொரு காரில் 5 பேர் தப்பியோடியுள்ளனர், அதனை தொடர்ந்து காரில் இருந்த 573 கிலோ கொண்ட 20 லட்சம் மதிப்பிலான 18 செம்மரக்கட்டைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.. அதனை தொடர்ந்து இதுகுறித்து வனத்துறையினர் வழக்குபதிவு செய்து செம்மரக்கட்டைகள் கடத்தியவர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்க்கொண்ட போது, நாயக்கனேரி நடுவூர் பகுதியை சேர்ந்த ராம கிருஷ்ணன் மற்றும் சக்திவேல் என்பது தெரியவந்துள்ளது, அதனை தொடர்ந்து தலைமறைவாக இருந்த ராமகிருஷ்ணன் மற்றும் சக்திவேலை இன்று ஆம்பூர் வனத்துறையினர் கைது செய்து அவர்களிடம் இருந்து ஒரு இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர், அதனை தொடர்ந்து இருவரையும் ஆம்பூர் வனத்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்..
Next Story

