விலை ஏற்றத்தை குறைத்து நடவடிக்கை எடுக்க லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் சுமார் 200 க்கும் மேற்பட்டோர் தேனி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை

கோரிக்கை
தேனி மாவட்ட குவாரிகளில் எம்.சாண்ட் மணல், ஜல்லி உள்ளிட்ட கட்டுமான பொருட்களின் விலை கடுமையாக உயர்த்தப்பட்டதால் அதனை கண்டித்து டிப்பர் லாரி உரிமையாளர் சங்கத்தினர் ஐந்தாவது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் தேனி மாவட்டத்தில் இருந்து அண்டை மாநிலமான கேரளாவிற்கு கட்டுமான பொருட்களான எம்.சாண்ட் மணல் மற்றும் ஜல்லி கற்கள் தேனி மாவட்ட கல் குவாரிகளில் இருந்து டிப்பர் லாரிகள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது இந்த நிலையில் தேனி மாவட்டத்தில் உள்ள கல்குவாரிகளில் எம் சாண்டு மணல் விலையை திடீரென்று பல மடங்கு விலை ஏற்றியதால் கட்டுமான தொழில்கள் பாதிக்கப்பட்டதாக கூறி விலை ஏற்றத்தை கண்டித்து தேனி மாவட்ட டிப்பர் லாரி உரிமையாளர் மற்றும் ஓட்டுநர் நலச் சங்கத்தினர் 5 நாட்களாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன தேனி மாவட்ட கல் குவாரிகளில் ஒரு யூனிட் எம். சான்ட் மணல் ரூபாய் 3000 இருந்து 4000 ரூபாயாகவும் ஜல்லி கற்களின் விலை பல மடங்கு விலை அதிகரித்துள்ளது இதுகுறித்து குவாரி சங்கங்களின் சேர்ந்த உறுப்பினர்களை சந்தித்து விலை ஏற்றத்தை குறித்து கேட்டபோது கனிமவளத்துறை அதிகாரிகள் எங்களது குவாரிகளுக்கு 2 கோடி வரை அபராதம் விதிப்பதாகவும் மின் கட்டணம் போன்ற காரணங்களால் விலை ஏற்றம் செய்யப்பட்டதாக கூறியுள்ளனர் இதற்காக தேனி மாவட்ட டிப்பர் லாரி உரிமையாளர் சங்கத்தினர் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனுவை அளித்தனர் சுமார் 200க்கும் மேற்பட்டோர் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து மாவட்ட ஆட்சியரை சந்தித்து குவாரிகளில் மணல் விலை ஏற்றதால் கட்டுமானம் தொழிலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோரிக்கை மனுவை அளித்தனர்
Next Story