பனை மேம்பாட்டு இயக்கத்தின் சார்பில் 200 பனை விதைகள் நடப்பட்டது
Dharapuram King 24x7 |28 Sep 2024 2:57 AM GMT
பனை மேம்பாட்டு இயக்கத்தின் சார்பில் 200 பனை விதைகள் நடப்பட்டது
பனை மேம்பாட்டு இயக்கத்தின் சார்பில் 200 பனை விதைகள் நடப்பட்டது. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள மூலனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கோட்டை மருதூர் ஊராட்சி கம்பிலியம் பட்டி, குமாரபாளையம் ஊராட்சி வடுகபட்டி ஆகிய பகுதிகளில் தமிழ்நாடு அரசு தோட்டக்கலை துறை மூலம் பனை விதை நடும் விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவிற்கு மூலனூர் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் மூலனூர் ஊராட்சி ஒன்றிய குழு துணைத்தலைவருமான பழனிச்சாமி தலைமையில் பனை விதைகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நீர் ஆதாரத்திற்கு பெரிதும் துணை நிற்கின்ற பனை மரங்களை வளர்க்கின்ற நோக்குடன் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணையின்படி கோட்டை மருதூர் ஊராட்சி கம்பளியம்பட்டியிலும், குமாரபாளையம் ஊராட்சி வடுகபட்டியிலும்,தமிழ்நாடு அரசு தோட்டக்கலை துறை சார்பில் மழை பயிர்கள் பனை மேம்பாட்டு இயக்க திட்டம் சார்பாக 200 பனை விதைகளை நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் எம் குமாரபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் செல்லமுத்து மற்றும் கோட்டை மருதூர் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும், ஒன்றிய குழு உறுப்பினர்கள், வார்டு உறுப்பினர்கள் பொதுமக்கள் என பெரும் திரளாக கலந்து கொண்டனர்.
Next Story