ராசிபுரம் நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் திருவிழா 200க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி, பால் குடம் ஊர்வலம்.
Rasipuram King 24x7 |31 Oct 2024 11:11 AM GMT
ராசிபுரம் நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் திருவிழா 200க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி ,பால் குடம் ஊர்வலம்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற நித்திய சுமங்கலி மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. பொதுவாக மற்ற மாரியம்மன் ஆலயங்களில் திருவிழா தொடங்கும் முன் கம்பம் நடப்படுவது வழக்கம்,பின்பு திருவிழா முடிந்த பிறகு நீர்நிலைகளில் அவை விடப்படும்,ஆனால் ராசிபுரம் நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவிலில் மட்டும் எப்பொழுதும் கம்பம் மற்றும் அம்மன் கழுத்தில் நிலையாக தாலி இருப்பதால் நித்திய சுமங்கலி மாரியம்மன் என்று பெயர் பெற்றது. இந்த நிலையில் வருடம் தோறும் ஐப்பசி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம் இந்த நிலையில் ஐப்பசி 5-ஆம் நாள் பூச்சாட்டுதலுடன் திருவிழாவானது தொடங்கியது. திருவிழா தொடங்கப்பட்ட முதல் நாளிலேயே இருந்து பல்வேறு சமுதாயத்தினர் சார்பில் அம்மனுக்கு அபிஷேகம் அலங்காரம் செய்து தீபாதாரணை காட்டப்படுவது வழக்கம் அந்த வகையில் இன்று தீபாவளி பண்டிகையை மற்றும் 9வது நாள் கட்டளையாக 200-க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி மற்றும் பால் குடம் எடுத்துக்கொண்டு ஊர்வலமாக சென்றனர்.ஊர்வலமானது கடைவீதி பகுதியில் இருந்து தொடங்கி பழைய பேருந்து நிலையம்,சேலம் சாலை, நாமக்கல் சாலை, உள்ளிட்ட சாலைகளின் வழியாக சென்று இறுதியாக நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவிலுக்கு சென்றடைந்தனர். ஊர்வலத்தில் குதிரை ஆட்டம், மேளதாளங்கள் முழங்க ஊர்வலம் சென்றது. பின்னர் பெண்கள் கொண்டு செல்லும் முளைப்பாரி மற்றும் பால் குடங்களை வைத்து அம்மனுக்கு அபிஷேகம் செய்து பின்னர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார் அதனை தொடர்ந்து தீபாவளி பண்டிகை முன்னிட்டு சுற்று வட்டார பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் அம்மனை கண்டு தரிசனம் செய்து அருள் பெற்று சென்றனர்..
Next Story