மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் சிறை நிரப்பும் போராட்டம்-200க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கைது*.

X
விருதுநகரில் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் சிறை நிரப்பும் போராட்டம்-200க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கைது. விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை உயர்த்தி வழங்குதல், 100 நாள் வேலை அட்டை மற்றும் பணி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களையும் கோஷங்களையும் எழுப்பினர். போராட்டத்தில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.
Next Story

