மூவாயிரத்து 200 கிலோ ரேசன் அரிசி மற்றும் சரக்கு வாகனம் பறிமுதல்
Komarapalayam King 24x7 |26 Feb 2025 7:29 PM ISTகுமாரபாளையம் அருகே மூவாயிரத்து 200 கிலோ ரேசன் அரிசி மற்றும் சரக்கு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை காவல்துறை இயக்குநர் . சீமா அகர்வால், மற்றும் காவல்துறை தலைவர் ரூபேஷ்குமார்மீனா, உத்தரவுபடி, கோவை மண்டல காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், ஈரோடு சரக காவல் துணைக் கண்காணிப்பாளர் ராஜபாண்டியன் ஆகியோர் மேற்பார்வையில், ரேசன் அரிசி கடத்தலை தடுக்க நாமக்கல் மாவட்டத்தில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி காவல் உதவி ஆய்வாளர் ஆறுமுக நயினார் தலைமையிலான போலீசார் மற்றும் குமாரபாளையம் வட்ட வழங்கல் அலுவலர் திவாகர் , பறக்கும் படை தனி வருவாய் ஆய்வாளர் முருகேசன் அவர்களுடன் இணைந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தகவலின் பேரில் குமாரபாளையம் தாலுக்கா,சாணார்பாளையம் அருவி ரெஸ்டாரன்ட் அருகே வாகன தணிக்கை செய்து கொண்டிருந்த போது TN 30 AM 7421 என்ற பதிவு எண் கொண்ட கொண்ட தோஸ்த் சரக்கு வாகனத்தை சோதனை செய்த போது, வாகனத்தை ஓட்டி வந்த நபர், மேற்படி வாகனத்தில் வந்த மூன்று நபர்களில் இருவர் தப்பி ஓடிய நிலையில் வாகனத்தில் வந்த ஆவத்திபாளையம் பகுதியில் வசிக்கும் குமரேசன் என்பவரை கைது செய்து, அவர் வந்த வாகனத்தில் இருந்து தலா 50 கிலோ எடையுள்ள 64 சாக்கு மூட்டைகளில், சுமார் மூன்று ஆயிரத்து 200 கிலோ பொது விநியோகத் திட்ட ரேஷன் அரிசி கைப்பற்றப்பட்டது. அவரிடம் விசாரித்த போது குமாரபாளையம் பள்ளிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் பொது மக்களிடம் இருந்து ரேஷன் அரிசியை வாங்கி வருவதாகவும், அதனை பள்ளிபாளையத்தில் யுவராஜ் என்பவர் நடத்தும் கல்யாணி புட்ஸ் இட்லி மாவு கம்பெனிக்கு எடுத்துச் செல்வதாகவும், தப்பி ஓடிய ஓட்டுநர் சீனிவாசன் மற்றும் உடன் வந்த பட்டறை பிரபு ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்து, அவர்களிடம் இருந்து ரேசன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட குமரேசன் குற்றவியல் நீதித்துறை நடுவர் முன்பு ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்
Next Story


