நசியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்ட சைபர் குற்ற விழிப்புணர்வு பேரணி - 200க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்பு...*

X
விருதுநகரில் காரியாபட்டியில் உள்ள நசியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்ட சைபர் குற்ற விழிப்புணர்வு பேரணி - 200க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்பு... தற்போது தமிழகத்தில் சைபர் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் இது சம்பந்தமாக தமிழக அரசும், காவல்துறையும் பொது மக்களுக்கு விழிப்புணர்வு எச்சரிக்கையை விடுத்தும் அது சம்மந்தமாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகின்றனர், அதனை முன்னிட்டு இன்று விருதுநகரில் காரியாபட்டியில் உள்ள நசியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ,மாணவிகள் கலந்து கொண்ட சைபர் குற்ற விழிப்புணர் பேரணியை பள்ளியின் முதல்வர் காயத்ரி தலைமையில் மேற்கு காவல்நிலைய குற்ற பிரிவு ஆய்வாளர் டேவிட் ரவி ராஜன் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார் . இந்த பேரணியில் சுமார் 200க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு, உங்கள் தரவு உங்கள் பொறுப்பு,உங்கள் செயல்கள் உங்கள் தாக்கம்,குறுஞ்செய்தி மூலம் பெறப்படும் வேலைவாய்ப்புகளில்நம்பகத்தன்மை உறுதிப்படும் வரை யாரை நம்பியும் நிதி வழங்க வேண்டாம், பதிவு செய்வோம்,பதிவு செய்வோம் சைபர் குற்றங்களை எதிர்த்துப் போராடும் 1930என்ற எண்ணிற்கு பதிவு செய்வோம்,கிடையாது கிடையாது டிஜிட்டல் கைது என்று எதுவும் கிடையாது போன்ற பதாகைகளை கையில் ஏந்திய படி பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த பேரணியில் கலந்து கொண்டனர் இந்த பேரணியானது விருதுநகர் எம்ஜிஆர் சிலையில் ஆரம்பித்து நகராட்சி அலுவலகம், தெப்பம், மெயின் பஜார், மாரியம்மன் கோவில், தேசபந்து மைதானம் மற்றும் நகரின் முக்கிய வீதி வழியாக வந்து பழைய பேருந்து நிலையம் முன்பு முடிவடைந்தது மேலும் இந்த நிகழ்வில் பள்ளி இயக்குநர் பிரகாஷ், உதவி தலைமை ஆசிரியர் ராஜேஸ்வரி உடனிருந்தனர்
Next Story

