ரப்பர் விலை மீண்டும் ரூ.200 ஐ நெருங்கியது

X
குமரி மாவட்டம் மற்றும் கேரளாவில் ரப்பர் சாகுபடி செய்யப்படுகிறது. கோடைகாலம் தொடங்கும் முன்னரே தற்போது வெயில் காலம் தொடங்கியுள்ளதால் ரப்பர் பால் வெட்டு பணிகள் மந்தகதியில் நடந்து வருகிறது. இதனால் சந்தையில் ரப்பர் சரக்கு வரவு குறைந்துள்ளது. இது ரப்பர் விலையில் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. சர்வதேச சந்தையில் ரப்பர் விலை உயர்ந்துள்ளதும் கண்டெய்னர் பயன்பாடு செலவு அதிகரித்துள்ளதும் ரப்பர் இறக்குமதியில் லாபம் இல்லை என்ற நிலையை ஏற்படுத்தி உள்ளது. இதனால் உள்நாட்டு உற்பத்தியில் இருந்து அதிக அளவு சரக்கை கொள்முதல் செய்ய டயர் கம்பெனிகள் ஆர்வம் காட்டுகின்றன. இதனால் ரப்பர் விலை தற்போது உயர தொடங்கியுள்ளது. கோட்டம் மார்க்கெட்டில் ஆர் எஸ் எஸ் 4 கிரேட் ரப்பர் விலை ரூ. 197 ஆக இருந்தது. சர்வதேச சந்தையின் விலை ரூ. 206 ஆக உள்ளது. ஏப்ரல் மாதம் விலை மேலும் உயர வாய்ப்பு இருப்பதாக சந்தை நிலவரம் இருப்பதால், ரப்பர் சரக்கை இருப்பு வைத்திருக்க உற்பத்தியாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.
Next Story

