ஜெயங்கொண்டத்தில் கிறிஸ்தவ தேவாலயங்களில் குருத்தோலை ஞாயிறு கடைப்பிடிப்பு :பவனி ஊர்வலத்தில் 200-க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள்

X
அரியலூர், ஏப்.13 - ஜெயங்கொண்டத்தில் கிறிஸ்தவ தேவாலயங்களில் குருத்தோலை ஞாயிறு கடைப்பிடிக்கப்பட்டது .இதில் 200-க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் ஊர்வலமாக சென்று பவனி வந்தனர்.கிறிஸ்தவர்களின் தவக்காலம் மார்ச் 5-ம் தேதி சாம்பல் புதனுடன் தொடங்கி, 40 நாட்கள் கடைப்பிடிக்கப்பட்டு, புனித வாரத்தின் தொடக்கமாக குருத்தோலை ஞாயிறு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் புனித பாத்திமா அன்னை தேவாலயத்தில் குருத்தோலை ஞாயிறு கடைப்பிடிக்கப்பட்டது. முன்னதாக ஜெயங்கொண்டம் பஸ் நிலையத்தில் முன்பாக மறை மாவட்ட குரு ஜோசப்கென்னடி, தலைமையில் 200-க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் குருத்தோலையை கையில் ஏந்தியவாறு முக்கிய வீதிகளில் வலம் வந்தனர்.முன்னதாக பங்கு பேரவை தலைவர் வியாகுளம் வரவேற்றார். தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் கிறிஸ்தவ பாடல்களை பாடிக்கொண்டே முடிவில் புனித பாத்திமா அன்னை ஆலயத்தில் பவணியை நிறைவு செய்தனர். புனித வாரத்தை கொண்டாடும் வகையில் நடைபெற்ற திருச்சியில் அன்னை அசோசியன் உரிமையாளர் மார்டீன்,நியூ பிரான்ச் போலீஸ் இன்ஸ்பெக்டர் அமல்ராஜ் உள்ளிட்ட ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்று ஜெபம் மற்றும் பிரார்த்தனை செய்து குருத்தோலை ஞாயிறை நிறைவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.பாதுகாப்பு பணிக்காக ஜெயங்கொண்டம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்கள் நந்தகுமார், விமலா உள்ளிட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
Next Story

