தென் மண்டல அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டி. மாணவ மாணவியர்கள் உட்பட 200 பேர் பங்கேற்பு

X
விருதுநகரில் தென் மண்டல அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டி. மாணவ மாணவியர்கள் உட்பட 200 பேர் பங்கேற்பு. விருதுநகர் சிவகாசி சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் தென் மண்டல அளவிலான டேபிள் டென்னிஸ் (மேஜைபந்து) போட்டி நடைபெற்றது. போட்டியினை ஆரல் ஸ்போர்ட்ஸ் அகாடமி மற்றும் விருதுநகர் ஜேசிஸ் இணைந்து நடத்தினர். விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய ஐந்து மாவட்டங்களில் இருந்து மொத்தம் 200 மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பெண்கள் பிரிவில் 80 பேரும் ஆண்கள் பிரிவில் 120 பேரும் கலந்து கொண்டனர். போட்டிகள் வகுப்பு வாரியாக நடைபெற்றது . 1 முதல் 3 வகுப்பு வரை, 4 மற்றும் 5 , 6 முதல் 8 வரை, 9 மற்றும் 10 மற்றும் ஓப்பன் பிரிவு ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது.விருதுநகர் தொழிலதிபர் பென்டகன் பாண்டுரங்கன் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். இறுதிச்சுற்றில் யுகேஜி மற்றும் முதலாம் வகுப்பில் மகிழினி பெண்கள் பிரிவிலும், மகிழவா ஆண்கள் பிரிவிலும் வெற்றி பெற்று முதல் பரிசினை வென்றனர். 1 முதல் 3 வரை பெண் பிரிவில் - சிவதாசி சுபஸ்ரீ, ஆண் பிரிவில் அருப்புக் கோட்டை பிரனேஷ், 4 மற்றும் 5-ம் வகுப்பு ஆண் பிரிவில் அருப்புக்கோட்டை அதிரத், பெண் பிரிவில் ஈசாந்திகா அருப்புக்கோட்டை, 6 முதல் 8 ம் வகுப்பு ஆண் தேஜஸ் அருப்புக்கோட்டை, பெண் அசிலா அருப்புக்கோட்டை, 9 மற்றும் 10ம் வகுப்பு பிரிவில் ஆண் - ரிஷிராகவ், பெண் அசிலா ஆகியோர் முதல் பரிசினை பெற்றனர். போட்டியில் சரவணன், அன்பழகன், பாண்டி, முத்துராஜலிங்கம், அருண் ஆகியோர் கலந்து கொண்டு நடுவர்களாக பங்கு பெற்றனர். போட்டிக்கான ஏற்பாடுகளை ஆரல் ஸ்போர்ட்ஸ் அகாடமி தலைவர் பிரபு , செயலாளர் சங்கீதா, விருதுநகர் ஜேசிஸ் தலைவர் பிரகாஷ் மற்றும் செயலாளர் கணேஷ் குமார் செய்திருந்தனர்.
Next Story

