முதியவரை தாக்கி 200 பவுன் நகை கொள்ளை

X
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே கடுவனூர் கிராமத்தில் வீட்டில் இருந்த இரண்டு முதியோர்களை அடித்து விட்டு 200 பவுன் தங்க நகையை கொள்ளையடித்து சென்ற வீட்டில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஜத்சதுர்வேதி விசாரணை மேற்கொண்ட நிலையில், கொள்ளையர்களை பிடிக்க காவலர்கள் தீவிர தேடுதல் வேட்டை.. கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள கடுவனூர் ஓம் சக்தி நகரைச் சேர்ந்த கேசரிவர்மன் வெளிநாட்டில் இன்ஜினியர் ஆக பணியாற்றி வரும் நிலையில் தன்னுடைய மகள் மஞ்சள் நீராட்டு விழாவிற்கு கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு வெளிநாட்டில் இருந்து சொந்த கிராமமான கடுவனூர் கிராமத்திற்கு வந்துள்ளார், அப்பொழுது பேங்க் லாக்கரில் எடுத்து வைத்திருந்த 200 பவுன் நகையை எடுத்து வீட்டில் வைத்துவிட்டு பாஸ்போர்ட் ரெனிவல் செய்வதற்காக சென்னை சென்றுள்ளார், இந்த நிலையில் இவருடைய தந்தை முனியன் தாய் பொன்னம்மாள் ஆகியவர்கள் இருவரும் வீட்டில் தனியாக இருந்துள்ளனர் அப்பொழுது நேற்று இரவு நான்கு கொள்ளையர்கள் இரும்பு கம்பி உள்ளிட்ட பயங்கர ஆயுதத்துடன் வீட்டுக்குள் நுழைந்து,சத்தம் போட்டால் உங்களை கொலை செய்து விடுவேன் என்று சொல்லி முதியவர்களை அடித்து மிரட்டி உள்ளனர் இதனால் பயந்து போன இருவரும் உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ, என அச்சத்தில் பயத்துடன் , வீட்டில் இருந்துள்ளனர், அப்போது வீட்டின் பீரோவில் இருந்த 200 பவுன் தங்க நகையை கொள்ளையர்கள் திருடி சென்றனர், இந்த கொள்ளை சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்த நிலையில் இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஜத் சதுர்வேதி கொள்ளை போன வீட்டில் ஆய்வு செய்தார் மேலும் தடையவில் துறை, கைரேகை நிபுணர்கள், மற்றும் மோப்பநாய் உதவியுடன் குற்றவாளிகை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர், மோப்பநாய் அருகாமை கிராமமான பாக்கம் கிராமத்தில் உள்ள ராமலிங்கம் என்பவர் வீட்டிற்கு சென்று நின்று விட்டதால் பக்கத்து கிராமத்திலும் தற்போது காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர், சங்கராபுரம் பகுதியில் இரண்டு முதியவர்களை இரவில் அடித்து 200 பவுன் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.
Next Story

