வேலூரில் 200-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கைது!

X
வேலூர் அரசு பல்நோக்கு உயர் சிறப்பு சிகிச்சை மருத்துவமனையை முழுவதுமாக திறக்க கோரி வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே இன்று அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற இருந்தது. அனுமதி இல்லாமல் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற அதிமுக முன்னாள் அமைச்சர் முக்கூர் சுப்பிரமணி, மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே அப்பு உட்பட 200-க்கும் மேற்பட்ட அதிமுகவினரை போலீசார் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story

