தவெக மாநாடு 200 வாகனங்களில் அஜிதா ஆக்னல் தலைமையில் பயணம்

தூத்துக்குடி தமிழக வெற்றி கழக இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் இன்று மாலை நடைபெறுவதை முன்னிட்டு தூத்துக்குடடியில் இருந்து சுமார் 200க்கும் மேற்பட்ட வாகனங்களில் தமிழக வெற்றி கழகத்தினர் மாநாட்டிற்காக உற்சாகமாக புறப்பட்டு சென்றனர்.‌
தூத்துக்குடி தமிழக வெற்றி கழக இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் இன்று மாலை நடைபெறுவதை முன்னிட்டு தூத்துக்குடடியில் இருந்து சுமார் 200க்கும் மேற்பட்ட வாகனங்களில் தமிழக வெற்றி கழகத்தினர் மாநாட்டிற்காக உற்சாகமாக புறப்பட்டு சென்றனர்.‌ தமிழக வெற்றிக்கழக இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் இன்று மாலை நடைபெறுகிறது இதை முன்னிட்டு தமிழக முழுவதும் இருந்து ஏராளமான தமிழக வெற்றிக்கழக தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். தூத்துக்குடியில் தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் ஏற்பாட்டின் பேரில் சுமார் 200க்கும் மேற்பட்ட வாகனங்கள் மூலம் தமிழக வெற்றி கழக தொண்டர்கள் உற்சாகமாக மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வாகனங்களில் செல்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இன்று காலை 60க்கும் மேற்பட்ட வாகனங்கள் மூலம் தூத்துக்குடி ரோச் பார்க் பகுதியில் இருந்து இன்று காலை சுமார் 60க்கும் மேற்பட்ட வாகனங்களில் தமிழக வெற்றிக்கழக ஆண் பெண் தொண்டர்கள் உற்சாகமாக மதுரை மாநாட்டிற்கு கிளம்பி வருகின்றனர் இந்த வாகனங்களுக்கு வாகனங்களில் செல்லும் தமிழக வெற்றி கழக தொண்டர்களுக்கு அவர்களுக்கு தேவையான மூன்று வேலை உணவு மற்றும் மருத்துவ வசதி குடிநீர் ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. மேலும் மாநாடுக்கு செல்லும் வாகனங்களுக்கு தூத்துக்குடி மாவட்ட காவல் துறையினரிடம் வாகன ஓட்டுநர் உரிம சான்றிதழ் வாகனத்திற்கான ஆர்சி புக் சான்று இரண்டும் கொடுத்து அனுமதி பெற்று அந்த ரசீதை வாகனத்தில் ஒட்டிய வாகனத்தை மட்டுமே போலீசார் அனுமதித்தனர்.‌ தமிழக வெற்றி கழகத்தின் இந்த மாநாடு தமிழகத்தையே மாற்றி அமைக்கும் வகையில் இருக்கும் 2026 இல் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் தலைமையில் தமிழகத்தில் ஆட்சி அமையும் என தமிழக வெற்றிக்கழக தொண்டர்கள் உற்சாகமாக தெரிவித்தனர்.
Next Story