அதிமுக பாமக உள்ளிட்ட கட்சிகளில் இருந்தும் புதிதாகவும் 200க்கும் மேற்பட்ட இளைஞர்கள் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்

திருச்செங்கோடு நகரம் 16 வது வார்டு பகுதியில் இருந்து அதிமுக மற்றும் பாமக கட்சியில் இருந்து விலகியும் புதிதாக கட்சியில் சேர விரும்பியும் 200க்கும் மேற்பட்ட இளைஞர்கள் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் கே எஸ் மூர்த்தி முன்னிலையில் தங்களை திமுகவில் இணைத்து கொண்டனர்
நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் 16 வது வார்டு திமுக கிளைச் செயலாளர் சுல்தான் ஏற்பாட்டில் திமுக கிழக்கு நகர செயலாளர்நகர் மன்ற துணைத் தலைவர் கார்த்திகேயன் தலைமையில் 200க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அதிமுக பாமக உள்ளிட்ட கட்சிகளில் இருந்து விலகியும் புதியதாக தங்களை கட்சியில் இணைத்துக் கொள்ள விரும்பியும் வந்தவர்கள்நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் பரமத்தி தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் மூர்த்தி முன்னிலையில் திமுகவில் தங்களை திமுகவில் இணைத்து கொண்டனர் இந்த நிகழ்ச்சியில் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் பரமத்தி சட்டமன்ற உறுப்பினருமான கேஎஸ் மூர்த்தி அனைவரையும் வரவேற்று திமுக சால்வை அணிவித்தார். இந்த நிகழ்ச்சியில்திமுக மேற்கு நகர செயலாளர் முன்னாள் நகர்மன்ற தலைவர் நடேசன் உள்ளிட்ட திமுக முன்னணியினர் பலரும் கலந்து கொண்டு கட்சியில் இணைந்த 200க்கும் மேற்பட்டோருடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். திராவிட முன்னேற்றக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொள்ள வருகை தந்த அனைவரையும் நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் கே எஸ் மூர்த்தி மற்றும் திருச்செங்கோடு கிழக்கு நகர திமுக செயலாளர் கார்த்தி மேற்கு நகர செயலாளர் நடேசன் ஆகியோர் வரவேற்றனர். புதிதாக திமுகவில் இணைந்தவர்கள் தங்கள் பகுதியில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டினால் உடனுக்குடன் நிவர்த்தி செய்யப்படும் என்றும்.வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் திராவிட மாடல் திமுக ஆட்சி மீண்டும் மலர்வதற்கு முழுமையாக செயலாற்ற வேண்டும் என்றும் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் கே.எஸ்.மூர்த்தி கட்சியில் இணைந்த இளைஞர்களை கேட்டுக்கொண்டார்.
Next Story