ராசிபுரம் அருகே சாலையை சேதப்படுத்திய நபர் சாலை வசதி வேண்டும் என 200க்கும் மேற்பட்டோர் சுமார் 2 மணி நேரம் சாலை மறியல் போராட்டம்...

ராசிபுரம் அருகே  சாலையை சேதப்படுத்திய நபர் சாலை வசதி வேண்டும் என 200க்கும் மேற்பட்டோர் சுமார் 2 மணி நேரம் சாலை மறியல் போராட்டம்...
X
ராசிபுரம் அருகே சாலையை சேதப்படுத்திய நபர் சாலை வசதி வேண்டும் என 200க்கும் மேற்பட்டோர் சுமார் 2 மணி நேரம் சாலை மறியல் போராட்டம்...
ராசிபுரம் அருகே சாலையை சேதப்படுத்திய நபர் சாலை வசதி வேண்டும் என 200க்கும் மேற்பட்டோர் சுமார் 2 மணி நேரம் சாலை மறியல் போராட்டம்... சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்து சாலை அமைக்க RTO உத்தரவு விட்டதின் பேரில் அதிகாரிகள் வேகமாக பணியை செய்து கிராம மக்களுக்கு சாலையை ஏற்படுத்தினர்... நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த வெண்ணந்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட நாச்சிப்பட்டி அருகே உள்ள மதுக்கான்காடு பகுதியை சேர்ந்தவர் சம்பத் இவருக்கு சொந்தமாக 2 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் நிலை உள்ள நிலையில் இவரது நிலத்தின் வழியாக அதே பகுதியை சேர்ந்த சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் அந்தப் பாதையை பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த சில இளைஞர்களுக்கும், சம்பத் இடையே தகராறு ஏற்பட்டதால் சம்பத் தொடர்ந்து தனது பட்டா பாதை வழியாக கிராம மக்களை அனுமதிக்கவில்லை என கூறப்படுகிறது.இந்த நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு சம்பத் பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ள சாலையை சேதப்படுத்தியதாகவும் இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் 200க்கும் மேற்பட்டோர் சேலம் ஆட்டையாம்பட்டி சாலையில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டச் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்திய நிலையில் அப்போது கிராம மக்கள் தற்போது சாலை வசதி அமைத்து தந்தால் மட்டுமே செல்வதாக கூறியதால் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் ராசிபுரம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் டிஎஸ்பி விஜயகுமார், மற்றும் வெண்ணந்தூர் காவல் ஆய்வாளர் சுகவனம், மேலும் நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் சாந்தி சம்பவ இடத்தில் வந்து பொதுமக்களிடையே பேச்சுவார்த்தை நடத்தி சாலை வசதி அமைத்து தருவதாக கூறினார். பின்னர் பட்டா உரிமையாளர் சம்பத்திடம் கடந்த 40 வருடத்திற்கு மேலாக கிராம மக்கள் இந்த சாலையை பயன்படுத்தி வந்ததால் பாதையை தடுப்பதற்கு உங்களுக்கு உரிமை இல்லை எனவும் பட்டா நிலமாக இருந்ததாலும் பொதுமக்களுக்கு சாலைக்கு உட்பட்டது என்பதால் நீங்கள் அவர்களுக்கு வழித்தடம் விட வேண்டும் என கூறினார்.பின்னர் தொடர்ந்து நில உரிமையாளர் சம்பத் அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் ஒரு கட்டத்தில் அதிகாரிகள் துணையுடன் அப்பகுதியில் வாகனங்கள் செல்வதற்கு சாலை வசதியை ஏற்படுத்தித் தந்தனர். சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக கிராம மக்கள் சாலை மறியல் ஈடுபட்டு கிராம பகுதிக்கு செல்வதற்கு சாலை வசதியை ஏற்படுத்திக் கொண்டது குறிப்பிடத்தக்கது...
Next Story