உலக வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு தமிழகத்தில் 200 நாட்களில் 595 கொலைகள் நடந்துள்ளன! முன்னாள் அதிமுக அமைச்சர் வீரமணி பேச்சு
Tirupathur King 24x7 |23 July 2024 7:43 AM GMT
உலக வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு தமிழகத்தில் 200 நாட்களில் 595 கொலைகள் நடந்துள்ளன! முன்னாள் அதிமுக அமைச்சர் வீரமணி பேச்சு
திருப்பத்தூர் மாவட்டம் உலக வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு தமிழகத்தில் 200 நாட்களில் 595 கொலைகள் நடந்துள்ளன! திருப்பத்தூரில் திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணி பேச்சு திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்தில் மூன்றாவது முறையாக மின் கட்டணத்தை உயர்த்தியும் நியாய விலை கடைகளில் வழங்கப்பட்டு வரும் பருப்பு மற்றும் பாமாயில் ஆகியவற்றை நிறுத்த முயற்சி செய்யும் திமுக அரசை கண்டித்து அதிமுக முன்னாள் பத்திர பதிவு மற்றும் வணிகவரி துறை அமைச்சர் கே.சி வீரமணி தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில்1000த்திர்க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர் அப்போது முன்னுள்ள அமைச்சர் கே சி வீரமணி கண்டன கோஷங்கள் எழுப்பி கண்டன உரையாற்றினார் இந்த கண்டன ஆர்பாட்டத்தில் பேசிய அமைச்சர் இனிமேல் அதிமுக சார்பில் 15 நாட்களுக்கு ஒரு முறை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என முடிவாகி உள்ளது எனவே 15 நாட்கள் ரெஸ்ட் எடுத்துக் கொள்ளுங்கள் மீண்டும் ஆர்ப்பாட்டத்திற்கு தயாராகுங்கள் இந்த திமுக அரசை வீட்டுக்கு அனுப்பும் வரை அதிமுக தொண்டனும் ஒருவர் கூட ஓயக்கூடாது என்ன பேசினார் மூன்றாண்டுகளில் மூன்று முறை மின்சார கட்டத்தினை உயர்த்தியுள்ளனர் மாதாமாதம் மின் கட்டணம் கணக்கெடுக்கப்படும் என்று கூறிவிட்டு இரண்டு மாதத்திற்க்கு ஒரு முறை மின்கட்டணம் கணக்கெடுப்பு செய்கின்றனர் எனக்கு குற்றம் சாட்டினார் மேலும் உலக வரலாற்றையே இல்லாத அளவிற்கு தமிழகத்தில் கடந்த 200 நாட்களில் 595 கொலைகள் நடந்தேறியுள்ளன ஒரு குடும்ப ஆட்சி நடைபெறுகிறது என முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணி பேசினார் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார், திருப்பத்தூர் நகர செயலாளர் டிடி குமார், திருப்பத்தூர் அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
Next Story