திருச்செங்கோட்டில் 2000 பேர் பங்கு பெற்ற பசுமை மாரத்தான்
Tiruchengode King 24x7 |22 Sep 2024 5:08 AM GMT
திருச்செங்கோட்டில் 2000 பேர் பங்கு பெற்ற பசுமை மாரத்தான்
திருச்செங்கோடு ஒன்றிய திமுக மற்றும் உதயா ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் மாபெரும் பசுமை மரத்தான் போட்டி நடைபெற்றது. திருச்செங்கோடு அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இருந்து தொடங்கிய பேரணியை நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் சேலம் மண்டல நகரமைப்பு திட்ட குழு உறுப்பினர் மதுரா செந்தில், தலைமை செயற்குழு உறுப்பினர் நடேசன் பி.ஆர்.டி நிறுவனங்களின் மேலாண்மை இயக்குனர் பரந்தாமன், மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் சுரேஷ்பாபு, உதயா ஸ்போர்ட்ஸ் கிளப் தலைவர் தங்கவேல், செயலாளர் சுரேஷ்குமார் ஆகியோர் கொடி அசைத்து துவக்கி வைத்தனர். 4 வயது முதல் 8 வயது குட்பட்ட குழந்தைகளுக்கு இரண்டரை கிலோ மீட்டர் தூரமும், எட்டு வயதிற்கு மேல் 15 வயதில் உள்ள ஆண்கள் பெண்களுக்கு ஐந்து கிலோமீட்டர் தூரமும், அதற்கு மேல் வயது உள்ளவர்களுக்கு 10 கிலோ மீட்டர் தூரமும் போட்டி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள், இளைஞிகள், குழந்தைகள்,பெரியவர்கள் என பலரும் கலந்து கொண்டனர். குறிப்பாக கிருஷ்ணகிரி மாவட்டம் கர்கனஹல்லி பகுதியைச் சேர்ந்த பி.சி.ஏ பட்டதாரி விஜய் என்பவர் பின்பக்கமாகவே ஓடி பத்து கிலோமீட்டர் தூரம் கடந்தது பார்வையாளர்களை கவர்ந்தது 10 கிலோமீட்டர் தூரம் பரமத்தி பகுதியைச் சேர்ந்த தமிழரசன் முதல் இடத்தை பிடித்தார். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. இறுதியில் போட்டிகளில் வெற்றி பெற்ற மராத்தான் ஓட்ட பந்தயக்காரர்களுக்கு, திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் பரிசுகள் மற்றும் சான்றுகளை வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில் திருச்செங்கோடு ஒன்றிய குழு தலைவர் சுஜாதா தங்கவேல் தொழில் அதிபர் கோல்டு ஹார்ஸ் ரவி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இந்த மராத்தான் போட்டியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
Next Story