திருச்செங்கோடு முன்னாள் எம்எல்ஏ நூற்றாண்டு பிறந்தநாள் விழா!-பொதுமக்களுக்கு 2000 மரக்கன்றுகள் வழங்கப்பட்டது!

திருச்செங்கோடு முன்னாள் எம்எல்ஏ நூற்றாண்டு பிறந்தநாள் விழா!-பொதுமக்களுக்கு 2000 மரக்கன்றுகள் வழங்கப்பட்டது!
சுதந்திரப் போராட்ட வீரரும், திருச்செங்கோடு முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான மோளியபள்ளி வீ.ராமசாமியின் பிறந்த தினத்தன்று நூற்றாண்டு நிறைவு விழா மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி எலச்சிபாளையம் பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.
எலச்சிபாளையம் பேருந்து நிறுத்தத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுதந்திரப் போராட்ட வீரர் வீ.ராமசாமி அவர்களின் நூறாண்டு பிறந்த நாள் தின நிறைவு நிகழ்ச்சி எலச்சிபாளையத்தில் நடைபெற்றது,இவ்விழாவில் பொதுமக்களுக்கு இரண்டாயிரத்திக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.நாமக்கல் மாவட்டம். திருச்செங்கோடு வட்டம் எலச்சிபாளையம் ஒன்றியம் மோளிப்பள்ளி கிராமத்தில் 8.1.1925-ல் பிறந்தவர் தோழர் ராமசாமி. காந்தீயவாதியான அவரது தந்தை தனது மகனை சிறுவனாக இருக்கும் போதே காந்தி ஆசிரமத்தில் சேர்த்தார்.
ஆசிரம பள்ளியில் பயின்ற தோழர் ராமசாமி எளிய வாழ்க்கை முறையும், குடிப்பழக்கத்தை எதிர்த்தும்,தலித் மற்றும் உழைப்பாளி மக்கள் மீது நேசமும் கொண்ட முறையில் வளர்ந்தார்.விடுதலைப்போராட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்டு கட்சியில் உறுப்பினராக சேர்ந்தார்.உழைப்பாளி மக்களுக்காக போராடுகிற கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு பணியாற்றினார் இவருடைய பிறந்த தினத்தை கடைபிடிக்கும் வகையில் அனைத்து பகுதி மக்களுக்கும் பல்வேறு வகையான மரக்கன்றுகள் வழங்கும் விழா எலச்சிபாளையம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.ரமேஷ் தலைமையில் நடைபெற்றது.
கிழக்கு ஒன்றிய செயலாளர் வி.தேவராஜன் வரவேற்புரையாற்றினார்.கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ்.கந்தசாமி மரக்கன்றுகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ந. வேலுசாமி.எஸ்.தமிழ்மணி. சு.சுரேஷ்.முன்னாள் ஒன்றிய செயலாளர்கள் பி. சுரேஷ் கே.எஸ்.வெங்கடாசலம். மாவட்ட குழு உறுப்பினர்கள் பழனியம்மாள்.கவிதா. முன்னாள் மாவட்ட குழு உறுப்பினர் பி.தங்கராஜ்.ஏலூர் முன்னாள் வார்டு உறுப்பினர் ஜோதிமணி.கட்சியின் ஒன்றிய குழு உறுப்பினர்கள் மற்றும் கிளைச் செயலாளர் மூத்த தோழர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.இறுதியாக மூத்த தோழர் எஸ்.பெரியசாமி நன்றியுரையாற்றினார்.
Next Story