கத்தியை காட்டி ₹2000 பறித்த ரவுடி கைது

X

அரியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
திருச்சி அரியமங்கலம் சீனிவாசா நகரை சேர்ந்தவர் சண்முகம் (39). இவர் லட்சுமிபுரத்தில் பூக்கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் தனது கடையின் அருகே நின்ற சண்முகத்திடம், அங்கு வந்த திருச்சி மேல அம்பிகாபுரத்தை சேர்ந்த ரவுடி குட்டை பாலு என்ற பாலசுப்பிரமணி (39) கத்தியை காட்டி மிரட்டி, ரூ.2 ஆயிரத்தை பறித்த சென்றார். இதுகுறித்து அரியமங்கலம் போலீசார் வழக்குப்பதிந்து பாலசுப்பிரமணியை கைது செய்தனர்.
Next Story