செய்யூரில் தொகுதியில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் 2000 பேருக்கு மருத்துவ சிகிச்சை.

செய்யூரில்  தொகுதியில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் 2000 பேருக்கு மருத்துவ சிகிச்சை.
X
செய்யூரில் தொகுதியில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் 2000 பேருக்கு மருத்துவ சிகிச்சை.
செய்யூரில் தொகுதியில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் 2000 பேருக்கு மருத்துவ சிகிச்சை. செங்கல்பட்டு மாவட்டம்,செய்யூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இலத்தூர் ஒன்றியம் பவுஞ்சூர் தனியார் பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் மாவட்ட ஆட்சித் தலைவர் சினேகா தலைமையில் ஒன்றிய கழக செயலாளர் கார்த்திகேயன் முன்னிலையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ., செய்யூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பனையூர் மூ. பாபு ஆகியோர் மருத்துவ முகாமை குத்துவிளக்கு ஏற்றி வைத்து தொடங்கி வைத்து முகாமினை பார்வையிட்டனர். இதனைத் தொடர்ந்து பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இதில் ஒன்றிய குழு பெருந்தலைவர் சாந்தி ராமச்சந்திரன், வட்டார மருத்துவர் கங்காதரன் ஆகியோர் உடன் இருந்தனர். இந்த முகாமில் பொது மருத்துவம், சர்க்கரை நோய் பரிசோதனை, ரத்த அழுத்த பரிசோதனை, எலும்பு மூட்டு மருத்துவம், மகப்பேறு மகளிர் நல மருத்துவம், குழந்தைகள் நல மருத்துவம், இருதய மருத்துவம், நரம்பியல் மருத்துவம், நுரையீரல் மருத்துவம், சித்த மருத்துவம், ஸ்கேன் பரிசோதனை, மனநல மருத்துவம், தோல் மருத்துவம், உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகளுக்கு மருத்துவ நிபுணர்களால் பரிசோதனை செய்து சிகிச்சை மற்றும் மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டது. மேலும் மாற்றுத்திறனாளிகள் அட்டை, காப்பிடத்தை ஆகியவை பதிவு செய்யப்பட்டு உடனடியாக வழங்கப்பட்டது.
Next Story