அன்பு கரங்கள் திட்டத்தின் கீழ் தாய் தந்தை அல்லது பெற்றோரில் ஒருவரை இழந்து வறுமையில் உள்ள குழந்தைகளுக்கு பள்ளி படிப்பு வரை மாதம் 2000 வழங்கும் திட்டத்தில்

X
திருப்பத்தூர் மாவட்டம் அன்பு கரங்கள் திட்டத்தின் கீழ் தாய் தந்தை அல்லது பெற்றோரில் ஒருவரை இழந்து வறுமையில் உள்ள குழந்தைகளுக்கு பள்ளி படிப்பு வரை மாதம் 2000 வழங்கும் திட்டத்தில் திருப்பத்தூரில் 82 குழந்தைகளுக்கு அடையாள அட்டைகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். தமிழ்நாடு முதலமைச்சரால் , அன்பு கரங்கள் என்னும் திட்டம் துவங்கப்பட்டு அத்திட்டத்தின் கீழ் மிகவும் வறிய நிலையில் உள்ள குடும்பங்களில், தங்கள் தாய், தந்தையை இழந்து தங்களது உறவினர்களின் பாதுகாப்பில் குழந்தைகளை அரவணைத்து தொடர்ந்து பாதுகாத்திடும் வகையில், அவர்களது பள்ளிப் படிப்பு வரை இடைநிற்றல் இன்றி அவர்கள் கல்வியைத் தொடர 18 வயது வரை மாதம் 2,000 ரூபாய் உதவித்தொகை வழங்குவதோடு மட்டுமல்லாமல் பள்ளிப்படிப்பு முடித்தவுடன் கல்லூரிக் கல்வி மற்றும் உரிய திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளும் அவர்களுக்கு வழங்கிட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை, திருப்பத்தூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் அன்பு கரங்கள் திட்ட துவக்க விழா நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பெற்றோரை இழந்து, தங்களது உறவினர்களின் பாதுகாப்பில் வளர்ந்து வரும் குழந்தைகள் மற்றும் ஒரு பெற்றோரை இழந்து, மற்றொரு பெற்றோரால் பராமரிக்க இயலாத குழந்தைகளுக்கு, அவர்களின் 18 வயது வரையிலான மாதந்திர உதவித்தொகை அன்பு கரங்கள் நிதி ஆதரவு திட்டத்தின் கீழ் திருப்பத்தூர் மாவட்டத்தில் 82 குழந்தைகளுக்கு அடையாள அட்டைகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை மற்றும் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட சமூக நல அலுவலர் சுமதி, அனைத்து துறை சார்ந்த அரசு அலுவலர்கள் மற்றும் ஏராளமானோர் பங்கு பெற்றனர்.
Next Story

