தன்னார்வ அமைப்பு சார்பில் 2000 பனை விதை நடும் விழா

X
யாதும் ஊரே தன்னார்வ அமைப்பு சார்பில் 2000 பனை விதை நடும் விழா எம் எல் ஏ பனையூர் பாபு பங்கேற்பு செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டம் பாலையூர் கிராமத்தில் உள்ள ஏரிக்கரையில் யாதும் ஊரே தன்னார்வ அமைப்பு சார்பில் 2000 பனை விதை நடும் விழா ஒன்றிய செயலாளர் சிற்றரசு தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக செய்யூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பனையூர் மு.பாபு அவர்கள் கலந்துகொண்டு பனை விதை நடும் பணியை தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் பேரூர் செயலாளர் மோகன் தாஸ், யாதும் ஊரே தன்னார்வ அமைப்பு தலைவர் ரமணன், மாவட்ட கவுன்சிலர் டைகர் குணா, கூட்டம் தலைவர் நிர்மல் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story

