ராசிபுரத்தில் நெட் சர்வீஸ் சென்டரில் பட்டப்பகலில் 2000 ரூபாய் திருடிய இளைஞர் சிசிடிவி காட்சி வைரல்...

ராசிபுரத்தில் நெட் சர்வீஸ் சென்டரில் பட்டப்பகலில் 2000 ரூபாய் திருடிய இளைஞர் சிசிடிவி காட்சி வைரல்...
X
ராசிபுரத்தில் நெட் சர்வீஸ் சென்டரில் பட்டப்பகலில் 2000 ரூபாய் திருடிய இளைஞர் சிசிடிவி காட்சி வைரல்...
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் கடைவீதி பகுதியில் கே.கே. கம்யூனிகேஷன் என்ற நெட் சர்வீஸ் சென்டர் செயல்பட்டு வருகிறது. இதன் உரிமையாளர் ஜாபர் மற்றும் பணியாளர்கள் 4 பேர் உள்ளனர். இந்நிலையில் நெட் சர்வீஸ் பணிக்காக வீடு, மற்றும் கடைகளுக்கு சென்றுள்ளனர். மேலும் அலுவலகத்தில் பெண் ஊழியர் இருந்துள்ளார். இந்நிலையில் கடையில் மேல் மாடியில் இருந்து கீழே உள்ள கடைக்கு சென்றபோது இதை பார்த்த அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவர் கடைக்குள் புகுந்து மேஜை டிராவை திறந்து அதில் இருந்த 2000 ரூபாய்க்கு மேற்பட்ட தொகையை எடுத்துக்கொண்டு தனது பாக்கெட்டில் வைத்து கொண்டு செல்லும் போது கடை ஊழியர் பெண் அங்கு வந்து இளைஞரை யார் என்று கேட்டபோது அவர் கடை பெயரை கூறியுள்ளார். இதைக் கேட்ட கடை ஊழியரான பெண் அருகில் அந்த கடை உள்ளது என தெரிவித்துள்ளார். உடனடியாக ஒன்றும் தெரியாது போல் வேகமாக அந்த கடைக்கும் செல்லாமல் இறங்கி சென்றுள்ளார். பின்னர் தனக்கு சந்தேகம் வந்து மேஜை அறையை திறந்து பார்த்தபோது அதில் இருந்த 2000.ரூபாய்கும் மேல் பணம் காணாமல் போய் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து உரிமையாளருக்கு தகவல் தெரிவிக்கவே சம்பவ இடத்திற்கு வந்து சிசிடிவி கேமராவை பார்த்தபோது பணம் திருடி சென்றது தெரியவந்தது. இதனை அடுத்து நெட் சர்வீஸ் சென்டர் அதன் உரிமையாளர் ஜாபர் ராசிபுரம் காவல் நிலையத்தில் புகார் மனு வழங்கியுள்ளார். நேற்று முன்தினம் பட்டப் பகலில் நடைபெற்ற இந்த திருட்டு சம்பவம் தற்போது சிசிடிவி காட்சி மூலம் வைரலாகி வருகிறது.
Next Story